8 வருஷம்.. 2017-ல் விட்டதை இந்த ஆண்டு கே.எல் ராகுல் எட்டி பிடிப்பார் – பார்த்திவ் பட்டேல் பேட்டி

Parthiv Patel and KL Rahul
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் அண்மையில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 500 ரன்களுக்கு மேல் குவித்து தனது அற்புதமான பேட்டிங் பார்மை வெளிக்காட்டி இருந்தார்.

கே.எல் ராகுலுக்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமையும் : பார்த்திவ் பட்டேல்

இவ்வேளையில் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்சில் 162 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதன்பின்னர் தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்களை கடந்து முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. தற்போது நிலையில் கே.எல் ராகுல் 75 ரன்களை கடந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான கே.எல் ராகுலுக்கு 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது 2025-ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக இருக்கும் என்றும் அவரது சாதனையை அவரே எட்டிப்பிடிப்பார் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் அவரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

கே.எல் ராகுல் தற்போது மிகவும் கட்டுப்பாடுடனும், நிதானத்துடன் விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு ஏ அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் மிகப்பெரிய நம்பிக்கையை அவருக்கு கொடுத்துள்ளது. எனவே இந்த ஆண்டு அவருக்கு ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என்று நினைக்கிறேன். இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆண்டாக அமைந்தது.

இதையும் படிங்க : உன்னை இந்தியாவுக்கு இதை செய்ய வைக்கிறேன்னு சொன்னதை செஞ்சுட்டாரு.. குரு யுவ்ராஜ் ஆதரவு பற்றி அபிஷேக்

அதற்கடுத்து அவரது இரண்டாவது சிறந்த ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும் என்றும் அவரது கடந்த கால சாதனையை நிச்சயம் அவரே முறியடிப்பார் என்றும் பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே கடந்த 2017-ஆம் ஆண்டு கே.எல் ராகுல் ஒரே சீசனில் டெஸ்ட் போட்டிகளில் 633 ரன்கள் குவித்திருந்த வேளையில் தற்போது இந்த ஆண்டு மட்டும் கே.எல் ராகுல் 602 ரன்களை கடந்து தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement