அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்த ஏ.பி.டி – இந்திய ரசிகர்கள் குறித்தும் உருக்கம்

ABD

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அதிரடி வீரரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ.பி டிவில்லியர்ஸ்-க்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றால் அது மிகை அல்ல. அந்த வகையில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை தன்பக்கம் ஏபி டிவில்லியர்ஸ் வைத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்த அவர் அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் நடைபெற்று வந்த டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

abd

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் இன்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியான அறிக்கையில் : என்னுடைய கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து விளையாடினேன். இப்போது எனக்கு 37 வயதாகிறது. முன்புபோல் எந்தச் சுடரும் இப்போது பிரகாசமாக தெரிவதில்லை. இந்த நிதர்சனத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். எனவே என்னுடைய ஓய்வு முடிவை தற்போது நான் எடுத்து இருக்கிறேன். நான் விளையாடிய அனைத்து அணியில் இருந்த வீரர்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள் என அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

ABD

மேலும் அவரது ஓய்வு அறிவிக்கையில் : இந்திய கிரிக்கெட் பயணத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் எனக்கு கிடைத்த அன்பும், ஆதரவும் அபாரமானது. அதிலும் நான் இந்தியாவில் விளையாடியபோது இந்திய ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பிற்கு குறையே இல்லை. அந்த அளவிற்கு என் மீது அவர்கள் அன்பு செலுத்தி உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அதிரடி வீரரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ.பி டிவில்லியர்ஸ்-க்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்

அவர்கள் அனைவருக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்காக என்னுடைய குடும்பத்தினர் நிறைய தியாகங்களை செய்துள்ளனர். இனி என்னுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement