இது ஆரம்பம் மட்டுமே, இதோடு நிற்காமல் அதையும் செய்யுங்க – சூர்யகுமாருக்கு ஏபிடி வைக்கும் முக்கிய கோரிக்கை என்ன

AB DE villiers Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் அசத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா நவம்பர் 10 ஆம் தேதியன்று வலுவான இங்கிலாந்தை 2வது அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக விராட் கோலியே தடுமாறிய தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்பேவுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் கொஞ்சமும் சளைக்காமல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே வெளுத்து வாங்கிய அவருடைய ஆட்டம் அனைவரையும் வியக்க வைத்தது.

Suryakumar YAdav

- Advertisement -

அதிலும் பெர்த் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட அனைவரும் திண்டாடிய வேளையில் 49/5 என தடுமாறிய இந்தியாவை வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவது போல் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சரவெடியாக பேட்டிங் செய்த அவர் 133 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார். அதை விட ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியிலும் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15 ஓவரில் 107/4 என தடுமாறிய இந்தியாவை 244.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை விளாசிய அவர் கடைசி 5 ஓவரில் 69 ரன்கள் எடுக்க வைத்து 20 ஓவர்களில் 186 ரன்கள் குவிக்க உதவினார்.

நின்று விடக்கூடாது:

அப்போட்டியில் 61* (25) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஒய்ட் போல் வந்த பந்துகளை கூட அசால்டாக மடக்கி அடித்து சிக்ஸராக பறக்க விட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பொதுவாக 20+ வயதில் அறிமுகமாக வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் இதுவரை களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடித்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவரை இந்தியாவின் ஏபிடி இந்தியாவின் என்றும் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Suryakumar Yadav

மேலும் ரிக்கி பாண்டிங், வாஷிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களும் அவ்வாறே பாராட்டிய சூர்யகுமார் தம்மையும் மிஞ்சி விட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் நேரடியாகவே ட்விட்டரில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் ஆரம்ப காலங்களில் சூரியகுமார் இப்படி விளையாடுவார் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் ஏபி டீ வில்லியர்ஸ் 360 டிகிரியில் விளையாடும் இந்த அதிரடியான ஆட்டத்தை இதோடு நிறுத்தாமல் அடுத்த 5 – 10 வருடத்திற்கு தொடர்ந்து விளையாடினால் மட்டுமே காலத்திற்கும் யாராலும் மறக்க முடியாத 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரெடுக்கம் முடியும் என கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் யார் வேண்டுமானாலும் இப்படி விளையாடலாம் என்பதால் தொடர்ச்சியாக நீண்ட காலம் விளையாடி இயற்கையாகவே அந்த திறமையை கொண்டவர் என்பதை சூரியகுமார் நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சூர்யாவுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நீண்ட தூரத்தை கடந்து வந்திருக்கிறார். அவர் இவ்வாறு விளையாடுவார் என்பதை நான் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை. அவர் ஆரம்ப காலங்களில் தன்னுடைய திட்டங்களில் மட்டும் உறுதியாக இருந்தார்”

ABD

“ஆனால் தற்போது தனக்கென்று ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொண்டு பவுலர்களை அதிரடியாக அடித்து நொறுக்குகிறார். அந்த வகையில் அவரை பார்ப்பது சிறப்பாக உள்ளதுடன் அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. என்னை பொறுத்த வரை தற்சமத்தில் அவர் ஒன்றில் மட்டுமே முன்னேற வேண்டும். அதாவது அவர் தன்னுடைய கன்சிஸ்டன்ஸியில் கவனத்தை செலுத்த வேண்டும். குறிப்பாக தற்போது செய்வதை அடுத்த 5 முதல் 10 வருடங்களுக்கு செய்தால் மட்டுமே மகத்தான வீரர்கள் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வரலாற்றின் தங்கப்புத்தகத்தில் அவரால் இடம் பிடிக்க முடியும்”

“குறிப்பாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் யார் வேண்டுமானாலும் அப்படி விளையாடலாம். அந்த வகையில் சில வீரர்கள் அவர்களுடைய உச்சத்தை தொட்டு விளையாடுவது என்னை ஆர்வமடைய வைக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அது மிகப்பெரிய சாதனையாகும். குறிப்பாக சூர்யா தற்போது விளையாடுவதை பார்ப்பது சிறப்பாக உள்ளது” என்று கூறினார்.

Advertisement