ரிட்டையர்மென்ட் பற்றி தெரியாது.. ஆனா டீசல் என்ஜின் மாதிரியான தோனி அதை செய்ய பிரகாச வாய்ப்பிருக்கு.. ஏபிடி பேட்டி

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் துவங்கும் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொள்கிறது.

இம்முறையும் சர்வதேச கிரிக்கெட்டில் விடைபெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் 41 வயதை கடந்துவிட்ட அவர் கடந்த வருடமே லேசான முழங்கால் வலியுடன் தொடர்ந்து விளையாடியதால் பெரியளவில் பேட்டிங் செய்யவில்லை.

- Advertisement -

டீசல் என்ஜின்:
எனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்த அவர் ஏற்கனவே சொன்னது போல் தன்னைத் தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்களுக்காக சென்னை மண்ணில் இந்த வருடம் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா என்பது யாருக்கும் தெரியாது என தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் டீசல் எஞ்சின் போல எப்போதும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் தோனி இம்முறை மீண்டும் சிறப்பாக விளையாடி சென்னைக்கு 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் சிஎஸ்கே சில மகத்தான கிரிக்கெட்டை விளையாடினர். இந்த வருடம் எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவார் என்ற வதந்திகள் காணப்படுகிறது”

- Advertisement -

“அப்படி இருக்காது லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன். அவர் மீண்டும் விளையாடுவார். இந்த வருடத்துடன் அவர் முடிப்பாரா என்பது யாருக்கும் தெரியாது. அவர் டீசல் எஞ்சின் போல தொடர்ந்து ஓடக்கூடியவராக தருகிறார். தொடர்ந்து ஓடும் அவர் மகத்தான வீரர் சிறப்பான கேப்டன். தோனி இருப்பதும் ஸ்டீபன் பிளமிங் அமைதியான பயிற்சியாளராக செயல்படுவதும் ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் உள்ளதும் சென்னை அணியின் கலாச்சாரத்தை வாழ வைப்பதாக நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லீ கையால் மாபெரும் விருது வாங்கிய ரச்சின் ரவீந்திரா.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

“அவர்கள் எதிராக விளையாடுவதற்கு மிகவும் அச்சுறுத்தக்கூடிய அணி. அவர்களை வெல்வது எளிதல்ல. கடந்த வருடம் கோப்பையை வென்ற அவர்கள் இம்முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க விரும்புவார்கள். ஆனால் அதனால் தோனி மற்றும் அவர்களுடைய வீரர்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. அது அவர்களை ஆபத்தானவர்களாக ஆக்குகிறது என்று நினைக்கிறேன். எனவே அடுத்தடுத்த கோப்பைகளை அவர்கள் வெல்வார்களா? என்று கேட்டால் நிச்சயம் அதற்கான திறமை அவர்களிடம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement