ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் ஆர்சிபி அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் இருக்கிறது.
அதனால் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ள ஆர்சிபி இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடி வருகிறது. இம்முறை சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அதிக கோப்பைகளை வென்ற அணிகளை அதனுடைய சொந்த மண்ணில் ஆர்சிபி தோற்கடித்தது. மேலும் பேட்டிங், பௌலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் ஆர்சிபி அணி அசத்தி வருகிறது.
ஃபைனலில் பெங்களூரு:
இந்நிலையில் இந்த வருடம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றைத் தாண்டி ஃபைனலுக்கு செல்லும் என்று முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இம்முறை தங்களுடைய அணி நல்ல ஃபார்மில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே ஃபைனலிலும் சிறப்பாக விளையாடி ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது விராட் கோலியுடன் தாமும் சேர்ந்து ஐபிஎல் கோப்பையை தூக்கி வெற்றியைக் கொண்டாடுவேன் என்றும் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தம்மால் முடியாத அந்தக் கனவை இம்முறை விராட் கோலியுடன் சேர்ந்து நிஜமாக்குவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்”
ஏபிடி உறுதி:
“ஒருவேளை ஆர்சிபி ஃபைனலுக்கு சென்றால் அந்தப் போட்டி நடைபெறும் மைதானத்தில் நானும் எங்கள் வீரர்களுடன் இருப்பேன். விராட் கோலியுடன் சேர்ந்து ஐபிஎல் கோப்பையை தூக்குவதை விட எனக்கு வேறு எதுவும் மகிழ்ச்சியைக் கொடுத்து விட முடியாது. கடந்த பல வருடங்களாக அந்தக் கோப்பையை தூக்குவதற்கு முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆஸியில் சொதப்பிய விராட், ரோஹித் இதை செய்யாம போனது சோகமா இருக்கு.. ஆரோன் பின்ச் பேட்டி
இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. அதை செய்தால் குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடிய நேரடியாக ஃபைனல் செல்லும் வாய்ப்பை பெற முடியும். இல்லையென்றாலும் குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடி ஃபைனல் செல்லும் வாய்ப்பை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



