- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என் கேள்விக்கு பதில் சொன்னா.. சூரியகுமாருக்கு ஹோம்ஒர்க் பண்ணி ஹெல்ப் பண்ண தயார்.. ஏபிடி பதில்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தாமதமாக 31 வயதில் அறிமுகமான அவர் டி20 போட்டிகளில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கினார். அதனால் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் குறுகிய காலத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்தார்.

அதன் காரணமாக அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு தேடி வந்தது. ஆனால் அந்த வாய்ப்பில் கொஞ்சம் நிதானமாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் மோசமாக விளையாடினார்.

- Advertisement -

சூரியகுமாரின் கோரிக்கைக்கு:

குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஆஸ்திரேலியா தொடரில் அவர் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். மேலும் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது. அதனால் டி20 பிளேயர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள சூரியகுமார் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார்.

அந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட விரும்புவதாக சூரியகுமார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இடையேயான சமநிலையைக் தம்மால் கையாள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனவே அதைக் கையாண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளையாடுவதற்கான ஆலோசனையை வழங்குமாறு தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸிடம் அவர் வெளிப்படையாக கோரிக்கை வைத்திருந்தார்.

- Advertisement -

ஏபிடி பதில்:

இந்நிலையில் சூரியகுமாருக்கு தேவையான ஆலோசனைகளை விரைவில் வழங்க உள்ளதாக ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அதற்காக தாம் கேட்கும் சில கேள்விகளுக்கு சூரியகுமார் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஏபி பேசியது பின்வருமாறு. “சூரியகுமாரிடம் கேட்பதற்கு என்னிடம் ஏராளமான கேள்விகள் இருக்கிறது”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட் நடைபெறும் கொல்கத்தா மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“அவருடைய கேள்விக்கான பதிலைக் கொடுக்கவும் நான் தயாராகத் துவங்க உள்ளேன். வெவ்வேறு ஃபார்மட்டுகளை சமநிலைப்படுத்துவது குறித்த கேள்விக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதில் சூரியகுமாருக்கு பெரிய நம்பிக்கைகளும் கனவுகளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை அவர் தூக்கி எறிவார் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இடையில் நிலைத்தன்மையைக் கண்டறிவது பற்றி நான் எனது வீட்டுப்பாடத்தைச் செய்து சூரியகுமாருக்கு ஒரு நல்ல பதிலைக் கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -