எனக்கு இப்படி ஒரு மேனஜ்மென்ட் அமையல.. இந்திய அணி நிர்வாகத்தை ஓப்பனாக பாராட்டிய ஏபிடி

AB De Villiers
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராக வகையில் நடைபெறும் இத்தொடரில் இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் இத்தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த இவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தனர்.

- Advertisement -

எனக்கு அமையல:
அப்போது 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த சீனியர் வீரர்களை கழற்றி விட்டு பாண்டியா தலைமையில் புதிய அணி களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால் மும்பைக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட பாண்டியா தற்போது காயமடைந்துள்ளதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவை வழி நடத்துவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு அனுபவமிகுந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்க முடிவு என தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த 2 சீனியர் வீரர்களுக்கு ஆதரவும் வாய்ப்பு கொடுக்கும் இந்திய அணி நிர்வாகத்தை போல் தென்னாபிரிக்க அணி நிர்வாகம் தமக்கு கொடுக்கவில்லை என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் மற்றும் விராட் மீதான விமர்சனங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது ஒரு உலகக்கோப்பை. ஒருவேளை தற்போது விராட் கோலி விளையாடுவதற்கு போதுமானவராக இருந்தால் அவர் விளையாட வேண்டும். அவர் வயதை வைத்து தன்னுடைய கேரியரை நகர்த்துவதாக நான் கருதவில்லை. டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் தேவை என்பதை 20 வயதுடையவர்கள் கூட நன்றாக புரிந்து கொள்வார்கள்”

இதையும் படிங்க: முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டாரு.. ஓப்பனிங்கில் அந்த 2 பேர் ஆடுவாங்க.. டிராவிட் அறிவிப்பு

“நான் 35 வயதில் இருந்த போது இது போன்ற அணி நிர்வாகம் எனக்கு அமைந்திருப்பதை விரும்புகிறேன். இப்போதே ரோகித் மற்றும் விராட் ஆகியோரை தேர்வு இந்தியா தங்களுடைய அதிரடியான அணுகுமுறையை காண்பித்துள்ளது. இந்தியா டி20 உலகக் கோப்பை பற்றி தெளிவாக சிந்திக்கிறது. இது நல்ல முடிவாகும். இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எப்போதும் நல்ல வீரர்களை வைத்து விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement