ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் உள்ள பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் யாஷ் தயாள் ஆகியோரை மட்டும் தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலியை தக்க வைத்தது சிறந்த முடிவு என்று முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். மேலும் கோப்பையை வெல்லா விட்டாலும் பரவாயில்லை முதலில் சஹால், அஸ்வின், ரபாடா போன்ற தரமான வீரர்களை வாங்கி நல்ல அணியை உருவாக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஏபிடி பிளான்:
“விராட் கோலி இன்னும் நம்மிடம் இருப்பது நல்ல செய்தி. நாம் அதிகப்படியான வீரர்களை தக்க வைக்காததும் சிறந்த முடிவு. அதனால் இன்னும் நிறைய வீரர்களை வாங்க முடியும் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அடுத்ததாக சஹாலை ஆர்சிபி அணிக்கு கொண்டு வாருங்கள். முதலில் நாம் அவரை வெளியே விட்டிருக்கவே கூடாது”
“நாம் ஐபிஎல் கோப்பையை வெல்லக்கூடிய பவுலிங் அட்டாக் பற்றி பேசுகிறோம். அது போன்ற சூழ்நிலையில் யுஸ்வேந்திர சஹால், ககிஸோ ரபாடா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய 4 வீரர்களை வாங்க நான் முன்னுரிமை கொடுப்பேன். அவர்களை வாங்கிய பின் மீதமுள்ள பணத்தில் யாரை வாங்குவது என்பதைப் பற்றி நாம் ஏலத்தில் திட்டமிடலாம்”
கோப்பையை விட முக்கியம்:
“ஒருவேளை ரபாடாவை உங்களால் வாங்க முடியாவிட்டால் முகமது ஷமியை வாங்குங்கள். ஒருவேளை அவரையும் வாங்க முடியாவிட்டால் அர்ஷ்தீப் சிங்கை வாங்குங்கள் அது போன்ற நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. நமக்கு கோப்பை தேவையில்லை கோப்பை வெல்வதைப் பற்றி மறந்து விடுங்கள்”
இதையும் படிங்க: இனிமேலாவது இந்தியாவுக்கு.. அறியாம கூட குழி பறிக்கும் வேலையை விடுங்க.. சிஎஸ்கேவை விமர்சித்த உத்தப்பா
“நமக்கு முதலில் சின்னசாமி மைதானத்தை புரிந்து அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை வகுத்து நல்ல கிரிக்கெட்டை உணர்ந்து விளையாடும் வீரர்கள் தான் தேவை” என்று கூறினார். அவர் கூறுவது போல பெங்களூரு அணி பெரும்பாலும் தங்களுடைய சொந்த ஊரான சின்னசாமி மைதானத்திலேயே வெற்றி பெற தடுமாறுகிறது. அதனாலேயே அந்த அணியால் இதுவரை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.