அவங்கள மேல தான் தப்பு இருக்கு, அதுவும் ஒரு வகையான திருட்டு தான் – மன்கட் ரன் அவுட் பற்றி – ஏபிடி கருத்து

MAnkad Out
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக அத்தொடரின் 2வது போட்டியில் 301 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 8 விக்கெட்டுகள் இழந்த சமயத்தில் அதிரடியாக விளையாடி போராடிய சடாப் கான் 48 (35) ரன்கள் எடுத்திருந்த போது 11 ரன்கள் தேவைப்பட்ட கடைசி ஓவரின் முதல் பந்தில் எதிர்ப்புறமிருந்து பவுலர் பந்தை வீசுவதற்கு முன்னதாகவே வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். அதை கவனித்த பவுலர் ஃபரூக்கி மன்கட் முறையில் ரன் செய்தது வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் நேர்மைக்கு புறம்பாக வெற்றி பெற முயற்சி செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தனர். ஆரம்பகாலம் முதலே விதிமுறைக்குட்பட்டு நடைமுறையில் இருந்து வரும் அந்த அவுட்டை ஒரு முறை இந்திய வீரர் வினோ மன்கட் செய்ததால் மிகவும் பிரபலமாகி அவரது பெயருடன் அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏபிடி கருத்து:
இருப்பினும் பவுலர் ஒரு இன்ச் காலை வெளியே வைத்து போட்டால் அதற்கு தண்டனையாக ஃபிரீ ஹிட் கொடுக்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்கள் மட்டும் பல அடி செல்வது நியாயமா என்ற கோட்பாட்டை கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார். அதற்காக உலக அளவில் திட்டுகளை வாங்கினாலும் விதிமுறைக்குட்பட்டே செயல்பட்டதாக விடாப்பிடியாக நின்ற அவர் மற்ற பவுலர்களையும் மன்கட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அவருடைய தொடர்ச்சியான குரலில் நியாயம் இருந்ததால் மன்கட் அவுட்டை எம்சிசி மற்றும் ஐசிசி அமைப்புகள் அதிகாரப்பூர்வமான ரன் அவுட் பிரிவுக்கு மாற்றின. ஆனாலும் அதன் பின் தீப்தி சர்மா போன்றவர்கள் இந்த விதிமுறையை பின்பற்றி ரன் அவுட் செய்த போதெல்லாம் அவர்களை நேர்மைக்கு புறம்பானவர்களாகவே பெரும்பாலானவர்கள் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் அந்தப் போட்டியில் ஹச்டி அக்கர்மேன் எனும் வர்ணனையாளர் மன்கட் பற்றி நேரலையில் விமர்சித்ததை பற்றி ஒரு பாகிஸ்தான் ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு.

- Advertisement -

“மன்கட் செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஏன் எந்த அணியும் அதை ஒரு போட்டியின் 5 அல்லது 6வது ஓவர் போன்ற ஆரம்பகட்ட சமயங்களில் செய்வதில்லை? மாறாக ஏன் போட்டியின் கடைசி கட்ட நேரங்களில் செய்கிறார்கள்? இதற்கான காரணம் கடைசி நேரத்தில் அவர்கள் பதற்றமடைந்து வெற்றி காண்பதற்கு இதுவே ஒரே வழி என்ற எண்ணத்துடன் செய்கிறார்கள்” என கூறியதாக பதிவிட்டார். அந்த கருத்து உண்மையாகவும் இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:உலக கோப்பை 2023 : ரோஹித் சர்மா அசால்ட்டா 2 சதம், ஒரு 150 ரன்கள் அடிப்பாரு – முன்னாள் இந்திய வீரர் அதிரடி கணிப்பு

அதைப் பார்த்த தென்னாப்பிரிக்கத் ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் “ஏனெனில் போட்டியின் கடைசி கட்ட சமயங்களில் மட்டும் தான் பேட்ஸ்மேன்கள் ரன்களை திருடுவதற்காக முயற்சிக்கிறார்கள்” என்று அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் பவர் பிளேவில் எளிதாக ரன்கள் குவிக்கலாம் அல்லது கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் வெள்ளைக்கோட்டை விட்டு முன்பே வெளியேறுவதில்லை என்று ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். இருப்பினும் கடைசி கட்ட நேரங்களில் அவசரமாக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக வெளியேறுவதாலேயே அந்த சமயங்களில் அதிகமாக மன்கட் அவுட் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement