தோனி, விராட் கோலி அங்க வந்தா மட்டும் போதும்.. நாங்க பாத்துக்குவோம்.. ஏபிடி அழைப்பு

AB De Villiers 3
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தற்போது சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு மிகப்பெரிய விஸ்வரூபம் கண்டுள்ளது. அந்த வெற்றியை பார்த்து பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் தங்களுடைய சொந்த நாட்டில் தனித்தனியாக டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி அடுத்த தலைமுறை இளம் வீரர்களையும் பணத்தையும் சம்பாதித்து வருகின்றன.

அந்த வரிசையில் தென்னாப்பிரிக்க வாரியம் இந்த வருடம் புதிதாக எஸ்ஏ20 என்ற பெயரில் டி20 தொடரை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ள சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 6 அணி நிர்வாகிகள் தான் இந்த தென்னாபிரிக்க தொடரில் விளையாடும் 6 அணிகளையும் மொத்தமாக வாங்கியுள்ளனர்.

- Advertisement -

ஏபிடி அழைப்பு:
அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் அந்த தொடரில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் அந்தத் தொடரில் பிசிசிஐ விதிமுறையால் நட்சத்திர இந்திய வீரர்கள் யாரும் விளையாடாமல் இருந்து வருகிறார்கள். இந்த நிலைமையில் தங்களுடைய நாட்டில் நடைபெறும் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதை பார்க்க விரும்புவதாக எஸ்ஏ20 தொடரின் பிராண்ட் அம்பாஸிடர் மற்றும் ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய கேரியரின் கடைசி தொடரை தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடினால் அவர்களுக்கு அமோகமான ஃபேர்வெல் கொடுப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை இத்தொடரில் விளையாட வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

“ஒருவேளை அவர் தன்னுடைய கடைசி சீசனை இங்கு வந்து விளையாடினால் நாங்கள் விராட் கோலிக்கு அற்புதமான ஃபேர்வெல் கொடுப்போம். இருப்பினும் இதைப் பற்றி ஆர்.பி சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரை தவிர்க்கு வேறு எந்த இந்திய வீரர்களிடமும் நான் விவாதிக்கவில்லை. ஆனால் விரைவில் நாங்கள் இதற்கான வேலைகளை செய்து இந்திய வீரர்களை இங்கே விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம்.

இதையும் படிங்க: ஆஸி டி20 தொடரில் அவர் தான் ஸ்டேண்ட் அவுட் பிளேயரா அசத்துனாரு.. இளம் வீரருக்கு நெஹ்ரா பாராட்டு

“அடுத்த 2 சீசன்களில் அது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் 3 சீசனுக்கு பின்பு இந்திய வீரர்களை இத்தொடரில் பார்ப்போம் என்று நம்புகிறேன். குறிப்பாக எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி போன்றவர்கள் தங்களுடைய கடைசி சீசனை இங்கே விளையாட வைப்பதற்கு நாங்கள் கண்டிப்பாக முயற்சிப்போம்” என்று கூறினார். ஆனாலும் ஓய்வு பெற்று சில வருடங்கள் கழித்தால் மட்டுமே வெளிநாட்டு தொடர்களில் விளையாட முடியும் என்ற விதிமுறையை பிசிசிஐ வைத்திருப்பதால் இந்திய வீரர்கள் தென்னாபிரிக்க தொடரில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement