IPL 2023 : வாழ்க்கையில் முதல் முறையாக அன்பால் தோற்கடிக்கப்பட்டு கண் கலங்கிட்டேன் – ரசிகர்களுக்கு ஏபிடி நன்றி

AB De Villiers ABD
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல களமிறங்கும் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களது முதல் லட்சிய கனவு கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடுகிறது. முன்னதாக தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைச் சேர்ந்த ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் ஆரம்ப காலங்களில் டெல்லி, கொல்கத்தா போன்ற அணிகளில் விளையாடினாலும் பெங்களூரு அணிக்கு வந்த பின்பு தான் வெற்றிகரமாக செயல்பட்டார்கள் என்றே சொல்லலாம்.

கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் அதை நெருங்குவதற்கு பல போட்டிகளில் வெறித்தனமாக போராடிய அவர்கள் பெங்களூருவுக்கு நிறைய மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர்கள். அதில் அதிவேகமாக சதடித்து, அதிகபட்ச ஸ்கோர் (175*) பதிவு செய்து, அதிக சதங்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவானாக கிறிஸ் கெயில் சாதனை படைத்துள்ளார். அதே போல் 144 போட்டிகளில் கிட்டத்தட்ட 5000 ரன்களை 158.60 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி பல போட்டிகளை வெற்றிகரமாக பினிஷிங் செய்து கொடுத்த ஏபி டீ வில்லியர்ஸ் ஐபிஎல் வரலாற்றின் டாப் 2 பெரிய பார்ட்னர்ஷிப்களை விராட் கோலியுடன் இணைந்து பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

கலங்கிய ஏபிடி:
அதனால் பெங்களூரு ரசிகர்கள் கொண்டாடும் அந்த 2 மகத்தான வீரர்களும் வயது காரணமாக 2021 சீசனுடன் ஓய்வு பெற்று விட்டார்கள். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆர்சிபி ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருதை அறிமுகப்படுத்திய பெங்களூரு நிர்வாகம் அதை அவர்களுக்கு அறிவித்தது. அந்த நிலையில் 2023 தொடருக்கு முன்பாக நேற்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த விருது விராட் கோலி உள்ளிட்ட பெங்களூரு அணியினர் முன்னிலையில் அந்த 2 ஜாம்பவான்களுக்கும் கொடுக்கப்பட்டது.

புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானம் மொத்தமும் வழிந்து நிரம்பும் அளவுக்கு ஏராளமான பெங்களூரு ரசிகர்கள் நேராக வந்து கெயில், கெயில் என்றும் ஏபிடி ஏபிடி என்றும் விண்ணத்திர முழங்கி அன்பை வெளிப்படுத்தினார்கள். அப்போது மைதானத்தை சுற்றி வந்த ஏபிடி, கெயில் வெளிநாட்டைச் சேர்ந்த தங்களுக்கு இவ்வளவு பெரிய அன்பை கொடுத்த பெங்களூரு அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் மனதார நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ஏபி டீ வில்லியர்ஸ் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நன்றி தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் தனது வாழ்வில் முதல் முறையாக ஏபிடி ஏபிடி என்ற சத்தத்தால் தோற்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கும் ஏபி டீ வில்லியர்ஸ் பெங்களூரு ரசிகர்கள் தனது கண்களை கலந்த செய்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “இதை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. 26 மார்ச் 2023 கிறிஸ் கெயில் மற்றும் நான் ஆர்சிபி ஹால் ஆஃப் ஃபேம் கௌரவத்தைப் பெற்று எங்களுடைய ஜெர்சி நம்பர்கள் காலத்திற்கும் ஓய்வுக்கு உட்படுத்தப்பட்டன”

“அதனால் என்னுடைய இதயம் மலர்ந்துள்ளது. என்னுடைய மனைவி, 2 பையன்கள் மற்றும் பெண் குழந்தையுடன் ஆர்சிபி கோட்டையில் நடந்த போது எனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் நான் நடந்தாலும் இம்முறை வித்தியாசமான மனநிலையுடன் நடந்தது பிரமிப்பாக இருந்தது. ரசிகர்களால் வழிந்து நிரம்பிய சின்னசாமி மைதானத்தின் பால்கனியில் வந்த போது எனது கண்கள் முழுதும் கலங்கின. குறிப்பாக ஏபிடி என்ற சத்தம் என்னை முதல் முறையாக தோற்கடிக்கும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை”

இதையும் படிங்க: இன்னைக்கு அவரு கேப்டன். ஆனா ரோஹித் ஆரம்பத்துல எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காரு தெரியுமா? – பிரக்யான் ஓஜா நெகிழ்ச்சி

“பொதுவாக வெற்றிக்காக அந்த சத்தம் இருக்கும். ஆனால் இம்முறை உணர்ச்சி கடலில் மிதந்ததைப் போல் தோன்றியது. பெங்களூரு ஒரு பெருமைமிக்க நகரம். ஒரு அற்புதமான உரிமை மற்றும் நம்ப முடியாத அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2003இல் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தது முதல் எனக்கு நிறைய ஸ்பெஷல் நினைவுகள் தோன்றுகிறது. இந்த நாடு மற்றும் இங்குள்ள மக்களிடம் எனக்கு ஆழமான பிணைப்பு இருக்கிறது. அதற்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். விராட் கோலி உள்ளிட்ட அனைத்து அணி வீரர்களுக்கும் நன்றி. நன்றி ஆர்சிபி. நன்றி பெங்களூரு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement