இன்னைக்கு அவரு கேப்டன். ஆனா ரோஹித் ஆரம்பத்துல எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காரு தெரியுமா? – பிரக்யான் ஓஜா நெகிழ்ச்சி

Ojha
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனும், நட்சத்திர துவக்க வீரருமான ரோகித் சர்மா கடந்த 2007-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட இருக்கிறார்.

Rohith

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 49 டெஸ்ட் போட்டிகள், 243 ஒருநாள் போட்டிகள் மற்றும் 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் மும்பை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஓய்வு பெற்ற பல வீரர்களுக்கு அடுத்து அடுத்த தலைமுறை ஜாம்பவான்களின் வரிசையில் ரோகித் சர்மாவின் பெயரும் உள்ளது என்றால் மிகையல்ல.

அந்த அளவிற்கு அவர் இந்திய அணிக்காக தனது பெரிய பங்களிப்பினை வழங்கியுள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மாவின் ஆரம்ப கால போராட்டங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : 15 வயதுக்குட்பட்டோர் தேசிய முகாமில் நான் ரோகித் சர்மாவை முதல் முறையாக சந்தித்தேன். அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

Rohith

எனவே அவர் கிரிக்கெட் கிட் வாங்குவதற்காக கூட பல போராட்டங்களை சந்தித்துள்ளார். குறிப்பாக பால் பாக்கெட் விற்பனை செய்து அவர் கிரிக்கெட் உபகரணங்களை வாங்கியதாக அவரே என்னிடம் கூறியுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரோகித் சர்மா மிகச் சிறப்பான வீரர் என்று எல்லோருமே சொல்வார்கள். அவருக்கு எதிராக நான் விளையாடிய விக்கெட்டை வீழ்த்தி இருந்தாலும் அவர் ஆக்ரோஷமாக விளையாடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

உண்மையில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாத போது குறைவாகவே பேசிக் கொண்டோம். ஆனால் நாளடைவில் எங்களது நட்பு வளர ஆரம்பித்ததும் நிறைய பேசினோம் நிறைய பழக்கம் உண்டானது.

இதையும் படிங்க : IPL 2023 : அவர் இந்தியாவுக்கு விளையாட ரெடி ஆகிட்டாரு, சீக்கிரம் செலக்ட் பண்ணுங்க – ரோஹித்துக்கு கங்குலி நேரடி கோரிக்கை

இப்போது அவரை பார்க்கும்போது எங்களது பயணம் எப்படி ஆரம்பித்தது, எப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணி நான் மிகவும் பெருமை அடைகிறேன். இன்று கேப்டனாக இருக்கும் அவர் ஆரம்பகாலத்தில் சந்தித்த போராட்டங்களை நான் அவரது நண்பராக கேட்டறிந்துள்ளேன் என பிரக்யான் ஓஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement