ஆசிய கோப்பை 2023 : அந்த தரமான இந்திய வீரரை செலக்ட் பண்ணாதது ஏமாற்றமா இருக்கு – ஏபிடி அதிருப்தி பேட்டி

AB De Villiers 2
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதால் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இருப்பினும் அந்த அணியில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக திலக் வர்மா அதிருப்தியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அதற்கு ஏற்ப்படுத்தியுள்ளது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன் கண்டுடைப்புக்காக பேக்அப் வீரராக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

- Advertisement -

ஏபிடி ஏமாற்றம்:
அதை விட இந்த அணியில் மணிக்கட்டு ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்படாதது நிறைய முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2016இல் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய அவர் நாளடைவில் ஃபார்மை இழந்ததால் 2021 டி20 உலகக்கோப்பையில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்த அவர் இந்த உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுமாராக செயல்பட்டதால் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்.

ஆனாலும் குல்தீப், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா போன்ற தற்போதைய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்பின்னர்களில் யாருமே மணிக்கட்டு ஸ்பின்னராக இல்லாததால் சஹால் தேர்வு செய்யப்பட வேண்டும் என சௌரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் போன்ற நிறைய முன்னாள் ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் சஹால் தேர்வு செய்யப்படாதது தமக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சஹால் நீக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து தேர்வு குழுவினர் தாங்கள் யாரை விரும்புகிறார்கள் என்பதை நமக்கு காட்டியுள்ளனர். இருப்பினும் அவரை தேர்ந்தெடுக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது. ஏனெனில் சஹால் எப்போதுமே உங்களுடைய அணியில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய லெக் ஸ்பின்னராக இருப்பார். மேலும் அவர் எந்தளவுக்கு நுணுக்கங்களும் திறமையும் கொண்டவர் என்பதை நாமும் அறிவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:

முன்னதாக ஐபிஎல் தொடரில் நீண்ட காலம் விளையாடியதால் சஹால் எந்தளவுக்கு திறமை கொண்டவர் என்பதை ஏபி டீ வில்லியர்ஸ் நன்றாகவே அறிந்தவராக இருக்கிறார். இந்த நிலைமையில் சஹாலுக்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்று தெரிவித்த கேப்டன் ரோஹித் சர்மா யாராவது காயமடைந்து வெளியேறும் பட்சத்தில் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார். எனவே முன்னாள் வீரர்களின் ஆதரவுகளையும் பெற்றுள்ள சஹால் கடைசி நேரத்தில் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement