எனக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இவரே இருக்க வேண்டும். அதுவே எனது ஆசை – ஆரோன் பின்ச்

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகி இதுவரை 92 டி20 போட்டிகள், 146 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டேவிட் வார்னருடன் களமிறங்கி கடந்த பல ஆண்டுகளாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் பின்ச் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பேட்டிங்கில் மோசமான சறுக்களை சந்தித்து வருகிறார்.

Finch

- Advertisement -

இதன் காரணமாக ஃபார்ம் அவுட்டில் இருந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் t20 கிரிக்கெட்டில் இருந்தும் ஆரோன் பின்ச் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரரான ஆரோன் பின்ச் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்ற போது கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் தற்போது 35 வயதை எட்டியுள்ள வேளையில் ஓய்வை அறிவித்துள்ளதால் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கப்போவது யார் என்பது குறித்த கேள்வியும் அதிகளவில் எழுந்துள்ளது.

Finch

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் அடுத்த கேப்டனாக யார் வரவேண்டும் என்பது குறித்து ஆரோன் பின்ச் தற்போது தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அடுத்த கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற யோசனையில் தீவிரமாக இருக்கிறது.

- Advertisement -

என்னை பொறுத்தவரை டேவிட் வார்னர் அதற்கு ஒரு சரியான தீர்வாக இருப்பார். ஏனெனில் அவரது யுத்திகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதே வேளையில் ஆஸ்திரேலிய வீரர்களும் அவரது தலைமையில் விளையாட மிகவும் விருப்பப்படுவார்கள். ஆனாலும் நான் இதை 100% உறுதியாக கூற முடியாது.

இதையும் படிங்க : உலககோப்பை அணியில் சஞ்சு சாம்சனை ஏன் சேர்க்கவில்லை? பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம் – ரசிகர்கள் அதிருப்தி

ஏனெனில் அணி நிர்வாகம் அணியின் நலன் கருதி என்ன நினைக்கிறதோ அதுதான் நடக்கும். இருப்பினும் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின்படி டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என ஆரோன் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement