IND vs AUS : இப்படி விளையாடுனா நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – தோல்விக்கு பிறகு ஆரோன் பின்ச் வருத்தம்

Finch
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. முதன்மை வீரர்களை தவிர்த்து இரண்டாம் கட்ட அணியுடன் இந்தியா பயணித்த ஆஸ்திரேலிய அணியானது முதல் போட்டியில் 200 ரன்களை கடந்து சேசிங் செய்து அசத்தியது.

INDvsAUS

- Advertisement -

பின்னர் இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையே தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், துவக்க வீரர் கேமரூன் கிரீன் 52 ரன்களையும் குவித்தனர். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில் :

Virat Kohli Suryakumar Yadav

இந்த தொடரானது எங்கள் அணிக்கு தனிப்பட்ட வகையில் ஒரு நல்ல தொடராகவே அமைந்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தோம். ஆனால் இன்றைய மூன்றாவது போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே விளையாடியிருந்தோம். அதிலும் குறிப்பாக எங்கள் அணியின் இளம் வீரரான கிரீன் இந்த தொடர் முழுவதுமே நல்ல பங்களிப்பை வழங்கி இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணியை நாங்கள் வீழ்த்தி இருக்க வேண்டுமெனில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்திய மண்ணில் இந்திய அணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியாது. அந்த வகையில் நாங்கள் பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி சிறிது சறுக்களை இந்த போட்டியில் சந்தித்தோம். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டனர். அதிலும் குறிப்பாக விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்த பின்னரும் அவர்கள் அதிரடியாக விளையாடியது எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : IND vs AUS : ஜெயிச்சாலும் நாங்க பண்ணும் அந்த தப்பை சரிசெய்ஞ்சே ஆகனும் – வெற்றி பிறகு ரோஹித் பேட்டி

இருந்தாலும் ஒரு உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக இப்படி மிகச் சிறப்பான போட்டியை அளித்தது எங்கள் அணியின் வீரர்களுக்கும் நம்பிக்கையை அளித்திருக்கும். இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் இதுபோன்ற ஆக்ரோஷமான கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறோம். எங்களது அணியின் துவக்க வீரர் கேமரூன் கிரீன் ஆரம்பத்தில் இருந்தே மிக ஆக்ரோஷமாக விளையாடியது மிக நன்றாக இருந்தது என பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement