உலககோப்பையில் மட்டும் அவர் விளையாடலனா இந்திய அணிக்கு அது மிகப்பெரிய இழப்புதான் – ஆரோன் பின்ச் வெளிப்படை

- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் தற்போது ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதோடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் இந்த உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணியின் வீரர்களையும் உறுதி செய்து வருகின்றனர். இப்படி அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலப்படுத்தி வரும் வேளையில் இந்திய அணியில் தொடர்ச்சியாக வீரர்கள் காயமடைந்து வெளியேறி வருவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

IND Japrit Bumrah

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பும்ரா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ள வேளையில் இந்திய அணிக்கு இவையெல்லாம் மிகப்பெரிய பின்னடைவைத் தரும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் : பும்ரா மட்டும் உலகக்கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக மாறும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது :

Bumrah

பும்ரா நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக இருப்பார். அவர் விளையாடிய வரை உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்ந்திருக்கிறார். ஒருவேளை அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போனால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்புதான்.

- Advertisement -

அவரை தவிர்த்து இந்திய அணி அந்த விக்கெட் டேக்கிங் எபிலிட்டி உள்ள பவுலரை எவ்வாறு தேர்வு செய்யும் என்பதும் ஒரு கடினமான முடிவு தான் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : இருந்தாலும் தற்போதைக்கு இந்திய அணியிடம் நல்ல ஓப்பனிங் ஜோடி இருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் ஓரளவு சிறப்பான துவக்கத்தை கொடுத்தாலும் மீதமுள்ளவர்கள் அதிரடியாக ரன்களை குவிக்கும் அளவிற்கு தயாராக உள்ளனர்.

இதையும் படிங்க : IND vs AUS : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு உள்ள ஒரு ராசி – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

குறிப்பாக விராத் கோலி, ஹார்டிக் பாண்டியா. சூரியகுமார் யாதவ் என மிகச் சிறப்பான மிடில் ஆர்டர் இந்திய அணியிடம் இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாகவே இருக்கிறார்கள். ஆனாலும் நிச்சயம் இந்திய அணியில் சில முக்கிய வீரர்கள் இல்லாதது அவர்களுக்கு பின்னடைவை தரும் என ஆரோன் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement