IND vs AUS : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு உள்ள ஒரு ராசி – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணியானது அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Zampa

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்தது.

பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்களை மட்டுமே குவித்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இந்த தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தொடர்ச்சியாக இந்திய அணி கடந்த ஏழு தொடர்களாக ஒருநாள் போட்டிகளில் இந்திய மண்ணில் வெற்றி பெற்ற வேளையில் அந்த வெற்றி பயணத்திற்கு தற்போது ஆஸ்திரேலியா அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Shami

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்த வேளையில் அதற்கு அடுத்து இந்திய மண்ணில் எந்த ஒரு ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருந்த இந்திய அணியானது தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா அணியிடமே தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியின் புள்ளி விவரங்கள் வெளியாகி ஆச்சரியரத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் கடைசியாக ஆஸ்திரேலியா அணி 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் மட்டும் தான் சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs AUS : நீங்க இப்டி விளையாடுவீங்கன்னு எதிர்பார்க்கல, வெற்றிக்கு போராடியும் விராட் கோலியை விமர்சிக்கும் முகமது கைப்

மற்றபடி அவர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் ராசியான மைதானனாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement