IND vs AUS : நீங்க இப்டி விளையாடுவீங்கன்னு எதிர்பார்க்கல, வெற்றிக்கு போராடியும் விராட் கோலியை விமர்சிக்கும் முகமது கைப்

Kaif
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா அதற்கடுத்த போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்து 2 – 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. மறுபுறம் கடைசி 2 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 2019க்குப்பின் தொடர்ந்து சொந்த மண்ணில் 26 தொடர்களில் வென்று வந்த இந்தியாவை தடுத்து நிறுத்தி முதல் முறையாக தோற்கடித்து கோப்பையை வென்று பார்டர் – கவாஸ்கர் தொடரில் சந்தித்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலகின் புதிய நம்பர் ஒன் அணியாகவும் ஆஸ்திரேலியா மகுடம் சூடியுள்ளது.

Zampa

- Advertisement -

ஆனால் உலக கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் இந்தியா இப்படி கடைசி 2 போட்டிகளில் போராடாமல் தோற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் ஆஸ்திரேலிய நிர்ணயித்த 270 ரன்களை துரத்தும் போது 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து ரோகித் சர்மா – சுப்மன் கில் ஓப்பனிங் ஜோடி பிரிந்ததும் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வழக்கம் போல நங்கூரமாக நின்று பேட்டிங் செய்தார்.

கொஞ்சமும் திட்டமில்ல:
அவருடன் 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 32 ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்த வந்த அக்சர் படேல் அவசரப்பட்டு 2 ரன்களில் ரன் அவுட்டானார். இருப்பினும் சேஸ் மாஸ்டர் என்று கொண்டாடப்படும் விராட் கோலி அரை சதம் கடந்து விளையாடியதால் இந்தியாவும் வெற்றியை நோக்கி நெருங்கியது. ஆனால் அஸ்டன் அகர் வீசிய 36வது ஓவரின் முதல் பந்தில் சுமாரான ஷாட்டை அடித்து கேட்ச் கொடுத்து அவர் அவுட்டானதும் அடுத்து வந்த சூரியகுமார் கோல்டன் டக் அவுட்டானதும் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தி இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

IND vs AUS ODI

இந்நிலையில் அந்த சமயத்தில் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அரைகுறை மனதுடன் சுமாரான ஷாட் அடித்து விராட் கோலி அவுட்டானது எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் முகமது கைஃப் அதுவே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது ஒரு அரைகுறையான ஷாட்டாகும். அதில் எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. குறிப்பாக அதற்கு முந்தைய ஓவரில் அவர் அடித்த ஒரு பந்து டேவிட் வார்னர் கைகளுக்கு முன் ஒன் பவுன்ஸ் ஆனதால் விராட் கோலி தப்பித்தார்”

- Advertisement -

“பொதுவாக நீங்கள் சிக்சர் அடிக்க விரும்பினால் முதலில் அதற்கு முழுமையாக கமிட்டாக வேண்டும். குறிப்பாக விராட் கோலி எதையாவது செய்ய முடிவெடுத்தால் அதை முழுமையாக செய்ய வேண்டும். மாறாக அரைகுறை மனதுடன் அந்த ஷாட்டை அடிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக பந்து தேய்ந்து விட்டால் அதிக தூரம் பயணிக்காது. அப்படிப்பட்ட நிலையில் ஃபீல்டர்களுக்கு இடைவெளியில் பந்தை அடிக்க முடியாத நீங்கள் சற்று பவர் கொடுத்தாவது அடித்திருக்க வேண்டும். மொத்தத்தில் அது ஓரளவு நல்ல விராட் கோலியின் இன்னிங்ஸ். அவர் முடிந்தளவுக்கு பந்தை இடைவெளியில் அடித்து ரன்கள் எடுக்க முயற்சித்தார்”

Kaif

“அந்த இலக்கு மிகவும் பெரிதானதல்ல. 270 ரன்களை ஓவருக்கு சராசரியாக 5.25 ரன்கள் என்ற வீதம் எடுக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது. ஏனெனில் நீங்கள் 350 ரன்களை துரத்தவில்லை. அதற்கு முந்தைய ஓவரில் அஸ்டன் அகரை பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தது தான் விராட் கோலிக்கும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : ஒருத்தர் கூட 50 அடிக்கல. ஆனாலும் ஆஸ்திரேலிய அணி செய்ஞ்ச சம்பவத்தை பாத்தீங்களா? – விவரம் இதோ

முன்னதாக சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டானதை விட விராட் கோலி சுமாரான ஷாட் அடித்து அவுட்டானதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement