IND vs AUS : ஒருத்தர் கூட 50 அடிக்கல. ஆனாலும் ஆஸ்திரேலிய அணி செய்ஞ்ச சம்பவத்தை பாத்தீங்களா? – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை தொடரில் சமநிலை பெற்றிருந்ததால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையிருந்தது.

Zampa

- Advertisement -

அதன் காரணமாக மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 269 ரன்களை குவித்தது.

பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை மட்டுமே குவிக்க இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Mitchell Marsh 1

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியை வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்த ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கூட அரைசதம் அடிக்காத வேளையில் ஆஸ்திரேலியா அணி 269 ரன்கள் தொட்டதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு முறை ஒரு அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் அந்த அணி 250 ரன்களை கடந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இந்த சாதனையை நெதர்லாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இந்த சாதனையை செய்திருந்தன.

இதையும் படிங்க : 6 மாசத்துல உ.கோ வெச்சுகிட்டு கேப்டன் இப்படி செய்யலாமா? ரோஹித் சர்மாவை விளாசும் கவாஸ்கர் – நடந்தது என்ன

இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் ஆஸ்திரேலியா அணி இந்த சாதனை பட்டியலில் முதன்முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement