15 வருசமா என்னை அவர் பாடா படுத்திட்டாரு, அவுட்டாவதை தடுக்கவே முடியல – இந்திய பவுலரை பாராட்டிய ஆரோன் பின்ச்

Aaron Finch
- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் ஆரோன் பின்ச் கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக செயல்பட்டு அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார். குறிப்பாக டேவிட் வார்னருடன் இணைந்து எதிரணிகளை பந்தாடிய அவர் 2015 உலகக்கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (172, ஜிம்பாப்வேவுக்கு எதிராக) பதிவு செய்த வீரராக உலக சாதனையும் படைத்தார். அதனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட அவரது தலைமையில் 2019 உலகக்கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த ஆஸ்திரேலியா வரலாற்றில் முதல் முறையாக 2021 டி20 உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

ஆனால் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறிய அவர் மேற்கொண்டு அணிக்கு பாரமாக இருக்க விரும்பாமல் தன்னுடைய 35 வயதிலேயே கடந்த வருடம் 2022 டி20 உலகக்கோப்பையுடன் சொந்த மண்ணில் ஓய்வு பெற்றார். பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய ஜாம்பவான் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களையும் அச்சுறுத்துவதற்கென்றே எதிரணிகளில் சில மாகத்தான பவுலர்கள் இருப்பார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரரான ஆரோன் பின்ச் நட்சத்திர இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு எதிராக தம்முடைய கேரியரில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை.

- Advertisement -

பாடா படுத்திட்டாரு:
குறிப்பாக 2019 காலண்டர் வருடத்தில் விளையாடிய 4 போட்டிகளில் முறையே 6, 6, 14, 0 என சொற்ப ரன்களில் அவரை அவுட்டாக்கி புவனேஸ்வர் குமார் வெற்றிகரமாக செயல்பட்டார். மேலும் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 7 முறை புவனேஸ்வர் குமாரிடம் அவுட்டாகியுள்ள “நீங்கள் ஏன் எப்போதுமே அவருக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்டீர்கள்” என்று ட்விட்டரில் ஒரு இந்திய ரசிகர் ஆரோன் பின்ச்சிடம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக கால்கள் குறுக்கே செல்லும் அளவுக்கு உங்களுடைய புட் வொர்க் சரியில்லையா என்று அந்த ரசிகர் கேட்டார்.

அதற்கு “ஆம். அப்படி நடைபெறுவதை நிறுத்துவதற்கு 15 வருடங்களாக முயற்சித்தேன்” என்று சிரித்துக்கொண்டே ஆரோன் பின்ச் பதிலளித்துள்ளார். அதாவது தம்முடைய 15 வருட கேரியரில் மற்ற பவுலர்களை காட்டிலும் அதிக தொல்லை கொடுத்த புவனேஸ்வரை பாராட்டும் வகையில் வெளிப்படையாக அவர் பதிவிட்ட தற்போது வைரலாகி வருகிறது. அந்தளவுக்கு தரமான புவனேஸ்வர் குமார் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி புதிய பந்தை ஸ்விங் செய்து எப்பேர்பட்ட அதிரடி தொடக்க வீரர்களையும் திணறடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்தார்.

- Advertisement -

அதனால் 2013 முதல் 3 வகையான இந்திய அணியிலும் நிலையான இடம் பிடித்து முதன்மை பவுலராக உருவெடுத்த அவர் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியில் முக்கிய பங்காற்றி சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதே போல காட்டுத்தனமாக அடிக்கும் பேட்மேன்களை கொண்ட ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்களை கொடுத்து நிறைய விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதால் புவனேஸ்வர் குமார் என்றாலே துல்லியத்திற்கு பெயர் போனவர் என்று ரசிகர்கள் பாராட்டுவார்கள். இருப்பினும் 2018 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்தால் பின்னடைவுக்குள்ளான அவர் பழைய பன்னீர்செல்வத்தை போல் அசத்த முடியாமல் தடுமாறினார்.

ஆனாலும் போராடி காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த அவர் 2021 டி20 உலக கோப்பை, 2022 ஆசிய மற்றும் டி20 உலகக்கோப்பை போன்ற தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசவில்லை. மறுபுறம் பும்ரா, சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை பவுலர்கள் வந்ததால் கடந்த சில வருடங்களாவே நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று வந்த அவரை தற்போது பிசிசிஐ மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

இதையும் படிங்க:திலக் வர்மா 2023 உ.கோ அணியில் தேர்வு செய்யப்படுவாரா? முன்னாள் வீரர்களின் கோரிக்கைக்கு – கேப்டன் ரோஹித் சர்மா பதில்

அந்த நிலையில் சமீபத்தில் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் என்பதை நீக்கிய புவனேஷ் குமார் இந்தியன் என்று மட்டும் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. எனவே 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement