அங்கே சுரேஷ் ரெய்னா விளையாடுவதை பார்க்க எல்லோரும் ஆசைப்படுகிறோம் – பிசிசிஐக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

raina
- Advertisement -

கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு பல பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர்-1 தொடராக அபார வளர்ச்சி கண்டுள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட விறுவிறுப்பாக அமைவதுடன் இந்த தொடரால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை பிசிசிஐ சம்பாதிக்கிறது. இந்த வளர்ச்சியைப் பார்க்க ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட இதர நாடுகளும் தங்களது நாடுகளில் பிரத்தியேக டி20 தொடரை நடத்தி வருகின்றன.

IPL 2022

- Advertisement -

ஆனால் இதுவரை அந்த நாடுகளால் ஐபிஎல் உயரத்தை எட்ட முடியவில்லை என்பதற்கு தென் ஆப்பிரிக்காவை சிறந்த உதாரணமாக கூறலாம். ஏனெனில் மசான்சி பிரீமியர் லீக் எனும் டி20 தொடரை அந்நாட்டு வாரியம் சமீப காலங்களில் நடத்தி வந்த நிலையில் அந்தத் தொடர் எதிர்பாராத வெற்றியைப் கொடுக்காத காரணத்தால் கடந்த வருடம் மொத்தமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் அடுத்ததாக டி20 சேலஞ்ச் என்ற பெயரில் புதிய தொடரை உருவாக்கியுள்ள அந்நாட்டு வாரியம் அதை வரும் 2023 ஜனவரியில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

6 ஐபிஎல் அணிகள்:
அதில் பங்கேற்கும் 6 அணிகளை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அந்நாட்டு வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் 29 நிறுவனங்கள் பங்கேற்றாலும் ஐபிஎல் தொடரில் இடம் வகிக்கும் முக்கிய உரிமையாளர்கள் அந்த 6 அணிகளையும் மொத்தமாக வாங்கியுள்ளனர். குறிப்பாக ஜோகனஸ்பர்க் அணியை சென்னை நிர்வாகமும், கேப்டவுன் அணியை மும்பை நிர்வாகமும், டர்பன் அணியை லக்னோ அணி நிர்வாகமும், பார்ல் அணியை ராஜஸ்தான் நிர்வாகமும், போர்ட் எலிசபெத் அணியை ஹைதராபாத் நிர்வாகமும், பிரிடோரியா அணியை டெல்லி அணி நிர்வாகமும் வாங்கியுள்ளன.

CskvsMi

இதனால் இந்தியாவில் இருக்கும் ரசிகர்களும் அந்த தொடரை பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் தென்னாப்பிரிக்க வாரியம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் என்னதான் இந்திய அணி நிர்வாகங்கள் அங்குள்ள டி20 அணிகளை வாங்கினாலும் இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பிசிசிஐக்கு கோரிக்கை:
ஏனெனில் கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் எங்களது வீரர்களை அனுமதிக்க மாட்டோம் என்று பிசிசிஐ அடம் பிடித்து வருகிறது. இருப்பினும் இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்றால் அவர்களின் வாழ்வாதாரமும் பெருகும் தரமும் அதிகரிக்கும் என்று பலரும் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வித்தியாசமாக முன்வைத்துள்ளார்.

Chopra

அதாவது தற்போது தென் ஆப்பிரிக்காவில் 6 அணிகளையும் இந்திய நிர்வாகங்கள் வாங்கியுள்ளதால் அங்கு விளையாடும் தங்களது அணிகளில் இந்திய வீரர்களை விளையாட ஏலத்தில் வாங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி அணி நிர்வாகங்களே முன்வந்து இந்திய வீரர்களை வாங்கினால் பிசிசிஐயும் மறுப்பு தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அனைத்து அணிகளையும் இந்திய நிறுவனங்கள் வாங்கினால் அது முற்றிலும் இந்திய தொடரை போன்றதாகும். துபாயிலும் சில அணிகளை இந்திய நிர்வாகங்கள் வாங்கியுள்ளன. ஏற்கனவே ஐபிஎல் தொடரும் இரண்டரை மாதங்கள் நடைபெறும் நிலையில் இந்த தொடரும் வளர்ச்சியடைவதால் இது ஐசிசி கால அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்திய வீரர்களை தங்களது வெளிநாட்டு அணிகளிலும் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகங்கள் முடிவெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது”

ரெய்னாவை பார்க்கணும்:
“குறிப்பாக சுரேஷ் ரெய்னா அங்கு விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அதே தொடரில் விரைவில் இந்திய வீரர்களும் விளையாடுவதை பார்ப்பேன் என்று நம்புகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடாத வீரர்கள் அந்த தொடரில் விளையாட தயாராக இருப்பார்கள். அதிலும் ரெய்னா விளையாடினால் அவரை நிறைய நிர்வாகங்கள் பெரிய தொகை கொடுத்து வாங்க தயங்காது” என்று கூறினார். அவர் கூறுவதுபோல ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஏராளமான ரன்களை விளாசி நிறைய சாதனைகளை படைத்து 4 கோப்பைகள் வெல்ல முக்கிய பங்காற்றிய சுரேஷ் ரெய்னா “மிஸ்டர் ஐபிஎல்” என்று வல்லுனர்களாலும் ரசிகர்களாலும் போற்றப்படுகிறார்.

இருப்பினும் சுமாரான பாரம் காரணமாக இந்த வருடம் அவரை சென்னை நிர்வாகம் கழற்றி விட்டது அனைவரும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் அவருக்கு இன்னும் மவுசும் ரசிகர்களும் குறையாத காரணத்தால் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் விளையாடினால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் அந்த தொடரை பார்ப்பார்கள் என்று தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா அதற்காக தாமும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement