ராகுல் இந்த போட்டியில் விளையாடட்டும் ஆனால் அவரை இந்த இடத்தில் இறக்கி விடுங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsENG

இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் ஒரு ரன் மட்டுமே அடித்துள்ளதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனாலும் கடந்த போட்டி நடைபெற்று முடிந்த உடன் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் ; ராகுலை இந்த மூன்று போட்டிகளை வைத்து அணியில் இருந்து நீக்க முடியாது, அவர் ஒரு சாம்பியன் பெயர் அதனால் அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ராகுலின் ஃபார்ம் குறித்து விமர்சிக்க வேண்டாம் அவர் மீண்டும் இயல்பான ஆட்டத்திற்குத் திரும்புவார் என்று கூறியதாலும் இன்றைய நான்காவது போட்டியில் ராகுல் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

rahul

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்த போட்டியில் ராகுல் விளையாடட்டும் ஆனால் அவர் நம்பர் 4-ல் விளையாடுவது அவர் இழந்த பார்ம்மை மீட்டு கொண்டு வருவதற்கு சரியாக இருக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்தில் :

- Advertisement -

இந்திய அணி 5 பவுலர்களை வைத்து விளையாட வேண்டும். அதே போன்று துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் கிஷனை விளையாட விட்டு அதன் பின்னர் 4-வது வீரராக ராகுலை இறங்கினால் அவரது பார்ம்மை மீட்டெடுக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தனது கருத்தை அவர் பதிவிடுவது குறிப்பிடத்தக்கது.