இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயம் இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்திய அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விளையாடிய போது அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

indvsaus

- Advertisement -

இந்நிலையில் இந்த வருடம் இந்திய அணி வெற்றிபெறும் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சென்ற இந்திய அணி சென்றிருந்தபோது அந்த அணியின் முக்கிய வீரரான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இல்லை. தற்போது இருவரும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர் . இதனால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் அணியில் முக்கியமாக இரண்டு புதிய வீரர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…
இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ப்ரீத்தி ஷா ஆகியோர் நன்றாக விளையாடுகின்றனர். அவர்கள் எப்போதும் போல் டெஸ்ட் அணியில் இருக்க வேண்டும் .

Iyer-1

அதனை தாண்டி தற்போது நன்றாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் கண்டிப்பாக டெஸ்ட் அணியிலும் இடம் பெற வேண்டும்.ஒரு நாள் போட்டிகளிலும் டி20 போட்டியிலும் தற்போது இந்திய அணிக்காக ஆடி வருகிறார். அவர் முதல் தரப் போட்டிகளில்.நன்றாக இருப்பதால் அவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சுழற்பந்து வீச்சாளரான சாகல் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளில் நன்றாக இவர் பந்து வீசி வருவதால் இவரும் இந்த டெஸ்ட் அணியில் இடம் பெற்றால் இந்திய அணி கூடுதல் பலம் பெறும் என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Advertisement