
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி அக்டோபர் ஒன்பதாம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. 2023 உலகக் கோப்பை உட்பட சமீப காலங்களில் டெல்லி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. எனவே அம்மைதானத்தில் வங்கதேசத்தை அதிரடியாக வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக இந்தச் சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தானைப் போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ சவால் விடுத்தார். ஆனால் அதற்கு தகுந்தார் போல் விளையாடாத வங்கதேசத்தை அடித்து நொறுக்கி வரும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வருகிறது. இந்நிலையில் வங்கதேச அணி உண்மையாகவே வாயில் சொல்வதற்கு தகுந்த சவாலை களத்தில் கொடுக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
எனவே நமது வீரர்களின் திறமையை சோதிக்க முதல் போட்டியைப் போல் அல்லாமல் 2வது போட்டியில் கேப்டன் சூரியகுமார் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 127 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பின்னர் 11.5 ஓவரில் எளிதாக வென்றது. எனவே முதலில் பேட்டிங் செய்தால் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அதே போல பவுலர்களும் பெரிய இலக்கை கட்டுப்படுத்த வேண்டிய சவாலை சந்திப்பார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் 70% நன்றாக விளையாடினால் கூட ஒரு போட்டியில் அல்லது தொடரில் வெல்ல முடியும். முதல் போட்டியில் நீங்கள் 2 அறிமுக வீரர்களுடன் களமிறங்கியும் ஒருதலைப் பட்சமாக வென்றீர்கள்”
“அதனால் உங்களுக்கு நீங்களே சவால் கொடுத்துக் கொள்ள வேண்டும் என உணர்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மேலே இருக்கும் போது யாரும் உங்களை தொட முடியாது. உங்களுக்கு நீங்களே சவால் கொடுக்க வேண்டும். எனவே டெல்லியில் சூரியகுமார் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை எதிரணி டாஸ் வென்றால் எப்படியும் உங்களை பேட்டிங் செய்ய சொல்வார்கள்”
இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட வில்லியம்சன் – என்ன காரணம்?
“பின்னர் வங்கதேச அணியும் நம்மை போல பேட்டிங் செய்தால் 225 – 250 ரன்களை அடிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இந்த வழியில் சவாலை சந்திக்க முயற்சிக்க வேண்டும். டெல்லியில் தற்போது இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருக்கிறது. எனவே இரவு நேரத்தில் அங்கே ஈரமான பந்தில் பந்து வீசி சவாலை சந்தித்தாலும் பரவாயில்லை” என்று கூறினார்.