சாம்சன் இருக்கட்டும்.. தோனியின் இடத்தை நிரப்ப சிஎஸ்கே அந்த இளம் கீப்பரை வாங்கனும்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் கோலாகலமாக நிறைவு பெற்றது. அந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமாக விளையாடி வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. அதனால் 2026 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளை சிஎஸ்கே நிர்வாகம் துவங்கியுள்ளது.

முதற்கட்டமாக ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், தேவால்ட் ப்ரேவிஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாய்ப்பளித்தது. அதில் அந்த 3 வீரர்களுமே சிறப்பாக விளையாடி தங்களை நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர். இதற்கிடையே விரைவில் 44 வயதை தொடும் தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சென்னையில் சாம்சன்:

ஒருவேளை விளையாடினால் கூட தோனியால் நீண்டகாலம் சிஎஸ்கே அணிக்காக விளையாட முடியாது. எனவே சிஎஸ்கே அணி தோனியின் இடத்தை நிரப்புவதற்காக தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை வாங்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான் அணியில் இருக்கும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்குவதற்கு சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தோனியின் இடத்தில் விளையாட சாம்சன் தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சாம்சனை போலவே ராஜஸ்தான் அணியில் இருக்கும் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேலையும் சிஎஸ்கே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் வெறும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜுரேல் சமீப காலங்களாகவே சிறப்பாக விளையாடி இந்தியாவுக்காக அறிமுகமானார்.

- Advertisement -

இளம் கீப்பர்:

குறிப்பாக தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரையும் வாங்க சிஎஸ்கே ஆலோசிக்க வேண்டுமென்று தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “டிரேட் சம்பந்தமாக சிஎஸ்கே ஆர்வம் காட்டியுள்ளது. அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அஸ்வின் அல்லது ஜடேஜாவை வாங்க விரும்புவார்கள்”

இதையும் படிங்க: டிஎன்பிஎல்: 123க்கு சேப்பாக்கை சுருட்டி வீசிய திருப்பூர்.. சாய் கிஷோர் தலைமையில் முதல் முறையாக சாதனை

“சாம்சனை வாங்க ஆர்வமாக இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். ஏனெனில் சாம்சன் நல்ல விக்கெட் கீப்பர் என்று அவர்கள் கருதுகிறார்கள். சிஎஸ்கே விரைவில் தோனியை தாண்டி விளையாட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. எனவே சாம்சனை வாங்குவது நல்ல ஆப்சன். ஆனால் என்னுடைய ஒரிஜினல் தேர்வாக துருவ் ஜுரேல் இருப்பார். ரிஷப் பண்ட் பற்றியும் நினைத்தேன். உர்வில் படேல் விக்கெட் கீப்பர் கிடையாது. சென்னை அணிக்கு அனுபவம், பரம்பரை, பெரிய பெயர் ஆகியவை தேவைப்படுகிறது. தோனியின் மரபை எடுத்துச் செல்ல விரும்பினால் அவரைப் போன்ற பண்பாற்றல் திறமை கொண்ட ஒருவர் தேவை” என்று கூறினார்.

Advertisement