இல்ல எனக்கு புரியல.. துணைக்கேப்டனா இருந்த அவரை எதுக்கு தூக்குனீங்க? – ஆகாஷ் சோப்ரா விளாசல்

Aakash-Chopra
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் அங்கு நடைபெற்ற மூன்று வகையான தொடர்களிலும் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பியுள்ளது. அதற்கு அடுத்து தற்போது இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 சர்வதேச தொடர் இது என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தயில் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் நேற்று இரவு இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் டி20 ஃபார்மேட்க்கு திரும்பி உள்ளதால் இந்த அணித்தேர்வு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த 16 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு எப்படியோ 16 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து விட்டது. இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் முன்வைத்துள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் அவர் குறிப்பிட்டதில் : ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய டி20 தொடரில் துணைக்கேப்டனாக செயல்பட்டார். அதேபோன்று தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் இடம்பெற்று விளையாடியிருந்தார். ஆனால் இப்படி திடீரென ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அவரை அணியிலிருந்து நீக்கியது ஏன் என்று புரியவில்லை? அதேபோன்று ஷிவம் துபே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்திருந்தார்.

இதையும் படிங்க : அவங்க செஞ்சா தப்பில்ல.. இந்தியர்கள் செஞ்சா குத்தம்.. 3 வாரத்துல இங்கிலாந்து புலம்புவாங்க.. கவாஸ்கர் விமர்சனம்

அதன் பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் இடம்பிடிக்காத அவர் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார். இதுமட்டுமின்றி இஷான் கிஷனை ஏன் தேர்வு செய்யவில்லை என்று எனக்கு புரியவே இல்லை என பல்வேறு விமர்சனங்களை இந்திய அணித்தேர்வு மீது ஆகாஷ் சோப்ரா முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement