- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை வரை கேப்டன்சி தாங்காது.. சூரியகுமார் யாதவின் பதவி குறித்து – ஆகாஷ் சோப்ரா கருத்து

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டியானது நாளை நடைபெறவுள்ளது.

டி20 உ.கோ தொடர் வரை சூரியகுமார் யாதவ் கேப்டனாக தாங்க மாட்டார் : ஆகாஷ் சோப்ரா

இந்நிலையில் கடந்த இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்ததற்கு மிக முக்கியமான காரணமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோரது மோசமான பேட்டிங் ஃபார்ம் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் கடைசியாக தான் விளையாடிய 20 சர்வதேச டி20 போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் 227 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் முதல் போட்டியில் 12 ரன்களை அடித்த அவர் இரண்டாவது போட்டியில் 5 ரன்களை மட்டுமே அடித்தார். இப்படி மோசமான பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்க மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு அணியின் கேப்டனாக இருக்கும்போது டாசுக்கு சென்று அங்கு டாசை கேட்பது பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பந்துவீச வைப்பது மட்டுமே அவர்களது வேலை கிடையாது.

- Advertisement -

ஒரு அணியின் கேப்டனாக ஒரு வீரர் விளையாடும் போது டாப் ஆர்டரில் வந்து அணிக்கு தேவையான ரன்களை குவித்து முக்கிய பங்கினை வகிக்க வேண்டும். ஆனால் சூரியகுமார் யாதவ் தனது பேட்டிங் ஃபார்ம் காரணமாக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். என்னை பொருத்தவரை அடுத்த உலக கோப்பை தொடர் வரை அவர் கேப்டனாக இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : பீகார் பையனான எனக்கு அதைப் பற்றி கவலையில்ல.. 171 ரன்ஸ் அடிக்க இதான் காரணம்.. சூர்யவன்சி பேட்டி

ஒரு கேப்டனாக மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களமிறங்கி ரன்களை குவித்தால் தான் அதில் கிடைக்கும் நம்பிக்கை வைத்து சிறப்பாக கேப்டன்சி செய்ய முடியும். ஆனால் தற்போது சூரியகுமார் யாதவிற்கு இரண்டுமே சந்தேகமாக உள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -