- Advertisement -
ஐ.பி.எல்

சன் ரைசர்ஸ் அணியில் அந்த தமிழக வீரரை துவக்க வீரராக களமிறக்குங்க – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

இந்தியாவில் மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது முதல் வாரத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து போட்டிகள் மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வரும் வேளையில் அனைத்து போட்டிகளிலுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தாங்கள் தொடங்கும் போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வர அது நல்ல பொழுது போக்கினை தந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து அளித்தது என்றே கூறலாம். ஏனெனில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 210 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 149 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் சிக்சரும், பவுண்டரிகளுமாக பறக்க ரசிகர்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது என்றே கூறலாம். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சன்ரைசர்ஸ் அணி குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : சன் ரைசர்ஸ் அணியின் ஓபனராக மற்றவர்கள் யாரும் யோசிக்காத ஒரு ஆப்ஷனை நான் தருகிறேன். அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி ஓப்பனராக வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்தலாம். ஏனெனில் பந்துவீச்சு பேட்டிங் என இரண்டையுமே அவர் துவங்கலாம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஓப்பனிங்கில் அவர் பேட்டிங் செய்யும் பட்சத்தில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அதேபோன்று அவருடன் தொடக்க வீரர் ராகுல் த்ரிபாதி களமிறங்க வேண்டும். வாஷிங்டன் சுந்தர் ஆறாவது, ஏழாவது, எட்டாவது இடத்தில் களம் இறந்குவதால் எந்த விதத்திலும் பயன் கிடையாது என்றும் அவரை வீணடித்து விட கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எனக்காக கேப்டனா இருங்க. தோனியிடம் கேட்டுக்கொண்ட வீரர் – அதுக்கு தோனி அளித்த பதில் என்ன தெரியுமா?

அவர் கூறியதுபோலவே : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் 42 குவித்து தனது பேட்டிங் பார்மை நிரூபித்தார். அதேபோன்று பவுலிங்கிலும் பவர் பிளேவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது நாம் அறிந்ததே.

- Advertisement -
Published by