எனக்காக கேப்டனா இருங்க. தோனியிடம் கேட்டுக்கொண்ட வீரர் – அதுக்கு தோனி அளித்த பதில் என்ன தெரியுமா?

Dhoni
Advertisement

ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.

Dhoni

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே ஜடேஜாவின் தலைமையில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதலாவது டி20 போட்டியில் தோல்வியை சந்தித்து வருத்தம் அளித்தது இருப்பினும் சென்னை அணி எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்க தவறாது என்பதன் காரணமாக இன்னும் சென்னை அணியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் தான் உள்ளது.

- Advertisement -

எது எப்படி இருப்பினும் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்திய வேளையில் தற்போது நியூஸிலாந்து வீரரான டேவான் கான்வே தோனியிடம் வைத்த வேண்டுகோள் குறித்த விவரம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

conway

அதன்படி இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் துவக்க வீரராக இணைந்து இந்த ஒரு சீசன் நீங்கள் எங்களுக்கு கேப்டனாக இருக்க வேண்டும் நான் தலைசிறந்த கேப்டனான உங்களின் கீழ் விளையாட விரும்புகிறேன் என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு தோனி கண்டிப்பாக நான் உங்களுடன் தான் இருப்பேன். ஆனால் என்னால் இந்த ஆண்டை கேப்டன்சி செய்ய முடியாது என்று மறுத்து இருக்கிறார்.

- Advertisement -

அவர் வெளியிட்ட இந்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு நான் இன்னும் ஒரு வருடம் நீங்கள் கேப்டனாக தொடர முடியாதா என்றும் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் எந்த பதிலையும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே நான் உங்களுடன் தான் உங்கள் அருகில் இருக்கிறேன் என்று தோனி கூறியதாகவும் கூறினார்.

இதையும் படிங்க : நெஞ்சங்களில் என்றும் வாழ்வீர்கள்! 50,000 ரசிகர்களுக்கு முன்னிலையில் ஷேன் வார்னேவுக்கு அளிக்கப்பட்ட கௌரம்

அதோடு நான் மதிய உணவு அருந்திய போது தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் இடையில்தான் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாகவும் அவர்களை நன்கு புரிந்து கொண்டதால் அவர்கள் இருவரையும் எனக்கு பிடித்திருக்கிறது என்றும் டேவான் கான்வே சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் தற்போது இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement