அவரை ஏலத்தில் எடுக்க பெங்களூரு அணி 20 கோடி குடுக்கவும் தயார் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூருவில் வருகின்ற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்த இந்த மெகா ஏலத்தில் இறுதியாக தற்போது 590 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீரர்களுக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ள வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்ய காத்திருக்கின்றனர்.

IPL

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில் சில அணிக்கு கேப்டன்சி செய்யும் வீரர்கள் தேவைப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக கேப்டன் செய்த விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியுள்ளார். அதேபோன்று பஞ்சாப் அணியின் கேப்டனாக பதவி வகித்து வந்த ராகுலும் அந்த அணியில் இருந்து வெளியேறி லக்னோ அணியின் கேப்டனாக மாறியுள்ளார்.

மேலும் இன்னும் சில அணிகள் தங்களது அணிக்கு கேப்டனை மாற்ற வேண்டி உள்ள சூழலில் புதிதாக வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கேப்டனாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி அணியின் முன்னாள் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஐபிஎல் ஏலத்தில் குறிப்பிட்ட இரண்டு அணிக்கு கேப்டனாக தெரிவுசெய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Iyer

இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது உள்ள சூழலில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அந்த வகையில் கொல்கத்தா மற்றும் ஆர் சி பி ஆகிய அணிகளில் ஒன்று ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க போட்டி போடும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அல்லது பெங்களூரு அணியின் கேப்டனாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

ஏனெனில் இரு அணிகளுமே இளமையான கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளதால் ஏற்கனவே கேப்டன்சி அனுபவமுடைய ஷ்ரேயாஸ் ஐயரை வாங்க போட்டி போடும். அதே வேளையில் பஞ்சாப் அணி அவரை கேப்டனாக நியமிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இதனால் கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவ அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் என்னிடம் ஒருவர் கூறிய தகவலின் படி ஷ்ரேயாஸ் ஐயரை வாங்க பெங்களூரு அணி 20 கோடி கொடுக்கவும் தாயாக இருப்பதாக தெரிவித்தார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ரஞ்சி கோப்பைக்கான தேதிகள் வெளியீடு – இது தான் கடைசி சான்ஸ் ! 2 சீனியர் வீரர்களை எச்சரித்த கங்குலி

இஷான் கிஷன் இளம் வீரராக இருந்தாலும் அவருக்கு கேப்டன்சி அனுபவம் கிடையாது. எனவே அவரை ஒரு வீரராக எடுக்க போட்டி இருக்குமே தவிர கேப்டனாக ஏலத்தில் எடுக்க போட்டி இருக்காது. இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஐபிஎல்லில் நிறைய போட்டி இருக்கும் என்று கூறியுள்ளார். அதேபோன்று வெளிநாட்டு வீரர்களாக ரபாடா, டிகாக், டேவிட் வார்னர் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement