கேப்டனா மட்டுமில்ல. ஒரு பிளேயரா கூட இனிமே அவருக்கு இந்தியன் டீம்ல சேன்ஸ் கிடைக்குறது கஷ்டம் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் மீதும், கேப்டன் ரோகித் சர்மா மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு தற்போது ஓய்வில் இருக்கும் இந்திய அணி அடுத்ததாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது.

IND vs AUS

- Advertisement -

அப்படி வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அதேபோன்று ஜூலை 12-ஆம் தேதி துவங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சில வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. அந்த வகையில் புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தேர்வு செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Rohit

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மோசமாக செயல்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை மாற்ற வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில் ரோகித் சர்மாவிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பதே கஷ்டம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மா மிகச்சிறந்த கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனால் அவரது எதிர்காலத்தை கணக்கில் கொண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு 100% அவர் மீது நம்பிக்கை கிடையாது. ஏனென்றால் ஏற்கனவே இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைவிட்டு விட்டோம். தற்போதைய ரோகித் சர்மா உடைய வயது மற்றும் அவருடைய உடற்பகுதி ஆகியவற்றை பார்க்கும் போது இனியும் அவர் தொடர்வாரா? என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.

இதையும் படிங்க : Ashes 2023 : ஜோ ரூட் இப்டி வித்யாசமாக பேட்டிங் செய்வதற்கு இந்தியாவுக்கு போய்ட்டு வந்ததே காரணம் – பீட்டர்சன் பாராட்டு

என்னை பொருத்தவரை இந்திய அணி ரோகித் சர்மாவுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரோகித் சர்மாவிற்கு இனி மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement