மீண்டும் அவரை கேப்டனா போட்டது எனக்கு சரியா படல – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

Chopra
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய ஐபிஎல் தொடரானது கொரோனா பாதிப்பினால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள 31 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது அமீரகம் பயணித்து இந்த தொடருக்கு தயாராகிவிட்டனர். இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடர்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.

Pant

- Advertisement -

இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அந்த காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் விலகினார். இதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை இளம் வீரரான ரிஷப் பண்ட் இடம் அந்த அணி நிர்வாகம் வழங்கியது.

அதன்படி அவரும் சிறப்பாக செயல்பட தற்போது 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 6 வெற்றிகளைப் பெற்று டெல்லி அணி புள்ளிபட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல் இரண்டாம் பாதியில் காயத்திலிருந்து குணமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைந்துள்ளார். அவர் அணியில் இணைந்தும் ரிஷப் பண்ட் தான் கேப்டனாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Iyer

இந்நிலையில் டெல்லி அணியின் இந்த முடிவு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : ரிஷப் பண்ட் நல்ல கேப்டன் தான். இருப்பினும் அந்த முடிவு எனக்கு சரியானதாக படவில்லை. ஏனெனில் 2-3 ஆண்டுகளாக ஷ்ரேயாஸ் ஐயர் தனது சிறப்பான கேப்டன்சியை வழங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அவர் கொண்டு சென்றுள்ளார்.

Iyer

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரை stand -in கேப்டனாக வைத்துள்ளது மிகவும் தவறு. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்த டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி தற்போது இந்த நிலைக்கு கொண்டு வந்தவர் அவர்தான். இருப்பினும் டெல்லி அணி இந்த ஆண்டு எளிதாக பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் என்றும் இறுதிப்போட்டிக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement