டி20 உலகக்கோப்பையில் நட்டு ஆடனுனா இதை பண்ணியே ஆகனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனது யார்க்கர் பந்துகளின் மூலம் உலகின் பல முன்னணி வீரர்களின் ஸ்டம்புகளை பறக்கவிட்ட தமிழக வீரரான நடராஜன் அந்த ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த உடனே ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு நெட் பவுலராக தேர்வானார். இப்படி நெட் பவுலராக ஆஸ்திரேலியா சென்று இருந்தாலும் அங்கு நடைபெற்ற மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களின் காயம் காரணமாக மாற்று வீரராக இந்திய அணிக்கு அறிமுகமான நடராஜன் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Nattu-1

- Advertisement -

தனது பந்து வீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வைத்திருந்த நடராஜன் நிச்சயம் டி20 உலக கோப்பையில் இடம்பெற்று விளையாடுவார் என்று அப்போது கூறப்பட்டது. மேலும் விராட் கோலியும் நடராஜன் நிச்சயம் டி20 உலக கோப்பையில் நிச்சயம் விளையாட தயாராவார் என்று கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தனது சிகிச்சை பெற்றார்.

அதன் பிறகு 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நடராஜன் ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகளில் பங்கேற்ற பின்னர் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக வீசும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணிக்கு இணைவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடரில் நடராஜன் இடம்பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : நடராஜன் சிறந்த பந்துவீச்சாளர் தான் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் காயத்தால் அவர் கஷ்டப்படுவது மட்டும் தான் இங்கு பிரச்சனையே. அவருடைய ஆரம்ப காலத்தில் அவர் டென்னிஸ் பந்தில் விளையாடி விட்டு தற்போது கிரிக்கெட் பந்தில் விளையாடுவதால் அவருக்கு இது சற்று கடினமாக இருக்கும்.

ஆனாலும் நடராஜன் போட்டியின் இறுதி கட்டத்தில் சிறப்பாக வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் அவரால் பவர்பிளே ஓவர்களில் பந்துவீச முடியுமா ? என்பது சந்தேகம் தான். இருந்தாலும் இதை இரண்டையும் அவர் சிறப்பாக செய்யவேண்டும் என்று பிசிசிஐ எதிர்பார்க்கும். எனவே காயத்திலிருந்து அவர் மீண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே அவருக்கு டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement