- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து டி20 தொடரில் அவரை ஏன் சேக்கலனு எனக்கு குழப்பமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா கருத்து

அண்மையில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது.

அவரை சேக்காதது குழப்பம் அளிக்கிறது :

இந்த அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும், ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது. வரும் ஜனவரி 22-ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் நட்சத்திர துவக்க வீரரான ஜெய்ஸ்வால் மீண்டும் டி20 அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் என 391 ரன்கள் குவித்து இந்திய வீரர்கள் சார்பில் அதிக ரன்கள் குவித்த அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு தான் என்றும் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்த அவர் அதன்பிறகு எவ்வித டி20 போட்டியில் விளையாடாமல் இருந்து வருகிறார். அதே வேளையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்பட இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஜெயஸ்வால் இந்த டி20 தொடரில் இடம் பெறாதது தனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜெய்ஸ்வால் இடம்பெறாதது உண்மையிலேயே எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறப்போகும் ஜெய்ஸ்வால் அதற்கு முன்னதாக சில போட்டிகளில் விளையாடியாக வேண்டும்.

இதையும் படிங்க : இனிமே அக்சர் படேலை டி20 அணியின் பிளேயிங் லெவனில் இருந்து தூக்கவே முடியாது – காரணம் இதோ

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மாற்று சுப்மன் கில் ஆகியோரே துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பதனால் ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது. எனவே என்னை பொறுத்தவரை அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அவர் டி20 அணியில் இடம்பெறாததால் அடுத்த 45 நாட்களில் எவ்வித சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் அவர் நேராக சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -