அவரை டீம்ல எடுத்தது இப்படி சும்மா நிக்க வைக்க தானா? பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சித்த – ஆகாஷ் சோப்ரா

Aakash-Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி இந்த இரண்டாவது போட்டியில் மீண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியிலும் ஏற்பட்ட தோல்வி ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் குறிப்பாக நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெடுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செய்த சில தவறுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தன என்று முன்னாள் வீரர்கள் பலரும் அவரது கேப்டன்சியை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா : அக்சர் பட்டேலுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அக்சர் பட்டேலுக்கு பந்துவீச ஒரு ஓவர் கூட பாண்டியா வழங்கவில்லை. என்னுடைய கேள்வி இதில் என்னவென்றால் : இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதனால் அவருக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

- Advertisement -

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகில் ஹுசைன் திலக் வர்மா இருந்தபோது கூட தைரியமாக பந்துவீசி அவரது விக்கெட்டை எடுத்திருந்தார். அந்த வகையில் பார்க்கும்போது பாண்டியா ஏன் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதே என்னுடைய கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs WI : வரலாற்றில் முதல் முறையாகவும் 2006க்குப்பின்பும் இந்தியா அவமான சாதனை தோல்வி – டிராவிட், பாண்டியாவை விளாசும் ரசிகர்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசையில் ஓப்பனர் முதல் கீழ்வரிசை வரை இடது கை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் தான் இருந்தாலும் தைரியமாக அவருக்கு வாய்ப்பினை வழங்கி இருக்க வேண்டும். ஒரு சுழற்பந்து வீச்சாளராக அக்சர் பட்டேலை அணியில் இணைத்து அவருக்கு இப்படி ஒரு ஓவர் கூட வாய்ப்பை வழங்காதது தவறு என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement