IND vs WI : வரலாற்றில் முதல் முறையாகவும் 2006க்குப்பின்பும் இந்தியா அவமான சாதனை தோல்வி – டிராவிட், பாண்டியாவை விளாசும் ரசிகர்கள்

Hardik Pandya Chahal
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்து தோல்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. மறுபுறம் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் இளம் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியா முதல் போட்டியில் வெறும் 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டிய இந்தியா மீண்டும் முதலில் பேட்டிங் செய்து வெறும் 152/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இஷான் கிசான் 27, சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 1, சஞ்சு சாம்சன் 7, ஹர்திக் பாண்டியா 24 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 51 (41) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப், அகில் ஹொசைன், ரொமாரியா செஃபார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

பரிதாப தோல்வி:
அதை தொடர்ந்து 153 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு ப்ரெண்டன் கிங் 0, கெய்ல் மேயர்ஸ் 15, ஜான்சன் சார்லஸ் 2, கேப்டன் ரோவ்மன் போவல் 21 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய போதிலும் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 67 (40) ரன்கள் எடுத்தார். அதனால் கடைசியில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் 18.5 ஓவரிலேயே 155/8 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றதால் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பாண்டியா 3, சஹால் 2 விக்கெட்களை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

அப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக உலகக் கோப்பைகளில் தோற்றாலும் இருதரப்பு தொடர்களில் இந்தியா மிரட்டலாக செயல்பட்டு வெற்றி பெறுவது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்து வந்தது. ஆனால் இந்த தோல்வியின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த 2 தொடர்ச்சியான இருதரப்பு போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது.

- Advertisement -

அதாவது கடைசியாக 2016ஆம் ஆண்டு ஒரு இருதரப்பு போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் ஆகிய 2 அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணியிடம் இந்தியா தோற்றது. ஆனால் முழுவதுமாக ஒரு இருதரப்பு தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற எந்த கேப்டன்கள் தலைமையிலும் அடுத்தடுத்த 2 இருதரப்பு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸிடம் இந்தியா தோற்றதில்லை. அதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடுத்தடுத்த 2 இருதரப்பு டி20 போட்டிகளில் தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற பரிதாபத்திற்கு ஹர்திக் பாண்டியா உள்ளாகியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் 1 தோல்வியை சந்தித்த இந்தியா இந்த தோல்வியையும் சேர்த்து மொத்தம் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக 18 வருடங்கள் கழித்து ஒரு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக 3 தோல்விகளை இந்தியா பதிவு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2006ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது இந்தியா 3 தோல்விகளை சந்தித்தது.

இதையும் படிங்க:IND vs WI : 2024 டி20 உ.கோ தோல்விக்கு முன்னோட்டமா? 2 மோசமான கேப்டன்ஷிப் தவறால் வெற்றியை தாரை வார்த்த பாண்டியா – ரசிகர்கள் கொதிப்பு

மொத்தத்தில் 2022 டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறாமல் 2023 உலக கோப்பைக்கும் தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸிடம் டிராவிட்டின் தேவையற்ற மாற்றங்கள் பாண்டியாவின் சுமாரான கேப்டன்ஷிப் ஆகியவற்றால் இந்தியாவுக்கு அடுத்தடுத்த அவமான தோல்வி கிடைத்துள்ளது. அதனால் அவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்து என்ன பயன் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement