ஹார்டிக் பாண்டியா இதை மட்டும் பண்ணாரு. வெங்கடேஷ் ஐயருக்கு ஆப்பு தான் – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

Chopra
- Advertisement -

இந்திய அணியானது அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியை டி20 தொடரில் 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கிலும் வாஷ் அவுட் செய்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்ரீலங்கா என மூன்று அணிகளையும் இந்திய மண்ணில் ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தற்போது ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி மிகப் பலமாக திகழ்கிறது.

venky

- Advertisement -

இந்த அணியில் எந்தெந்த இளம் வீரர்களை தேர்வு செய்து இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஏனெனில் அத்தனை இளம் வீரர்கள் தற்போது இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்திய அணியில் ஒரு முக்கிய இடமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கான இடம் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் ஆல்-ரவுண்டராக இருக்கும் பட்சத்தில் அணிக்கு அவர் ஆறாவது பந்துவீச்சாளர் ஆகவும் செயல்படுவார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டுவார் என்பதனால் அந்த இடம் மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வழக்கமாக இந்திய அணிக்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக பந்து வீசாமல் இருந்து வருவதால் அவருக்கு பதிலாக இந்திய அணி தற்போது அவரது இடத்தில் வெங்கடேஷ் ஐயரை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறது.

pandya

வெங்கடேஷ் ஐயரும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை அனைத்தும் அற்புதமாக பயன்படுத்தி வருவதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியுடன் செல்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாண்டியா மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரையும் ஒப்பிடுகையில் பாண்டியா தான் மிகச் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ; பாண்டியாவின் திறன் நாம் அறிந்ததே.

- Advertisement -

அவர் மட்டும் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் பந்து வீசினால் நிச்சயம் அவர்தான் இந்திய உலகக்கோப்பை அணியில் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளது. நான் வெங்கடேஷ் ஐயரை குறைத்து மதிப்பிடவில்லை ஆனாலும் பாண்டியா நிச்சயம் மிகச் சிறந்த வீரர். ரவீந்திர ஜடேஜாவும், பாண்டியாவும் ஆல்-ரவுண்டராக இந்திய அணியில் இருக்கும் பட்சத்தில் இந்திய அணி மேலும் பலம் பெறும்.

இதையும் படிங்க : ஜூலன் கோஸ்வாமி மீண்டும் உலகசாதனை ! ஆனாலும் இந்திய அணி சந்தித்துள்ள மோசமான நிலை – விவரம் இதோ

வெங்கடேஷ் ஐயர் தற்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் ஹர்டிக் பண்டியா ஓரளவு நல்ல அனுபவம் கொண்டவர். இதன் காரணமாகத்தான் அவர் மீண்டும் பந்துவீசும் அளவிற்கு தயாராகி விட்டால் நிச்சயம் வெங்கடேஷ் ஐயருக்கு முன்னதாக அணியில் தேர்வு ஆவார் என்றும் பாண்டியா அணிக்கு திரும்பும் பட்சத்தில் வெங்கடேஷ் ஐயர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement