தோனி குறித்து கம்பீர் கூறியது ரொம்ப தப்பு. கோலியை காப்பாத்துனதே அவர்தான் – விளாசிய ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

கௌதம் கம்பீர் அவ்வப்போது தோனி குறித்தான கருத்துக்களை வக்கிரத்துடன் தெரிவிப்பதில் முன்னணியில் இருக்கிறார். எப்போது பார்த்தாலும் தோனி அதை செய்யவில்லை, இது செய்யவில்லை என்று குறை கூறிக் கொண்டே இருப்பார். சமீபத்தில் இப்படித்தான் தோனி மற்றும் சவுரவ் கங்குலி குறித்து ஒப்பிட்டு ஒரு கருத்தைக் கூறியிருந்தார்.

Gambhir-1

- Advertisement -

அதாவது சௌரவ் கங்குலி இந்திய அணிக்கு ஜாஹீர் கான், ஆசிஸ் நெஹரா, விரேந்தர் சேவாக் போன்ற வீரர்களை உருவாக்கி கொடுத்தார். அவர்களை வைத்துதான் தோனி வெற்றி பெற்றார்
.அதேபோல் மகேந்திர சிங் தோனி அதனை விராட் கோலிக்கு செய்யவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இதில் எந்தவித உண்மையும் இல்லை என அனைவருக்கும் தெரியும்.

தற்போது கௌதம் கம்பீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா. இதுகுறித்து அவர் கூறுகையில் ..

dhoni

தோனி மிகச் சிறந்த கேப்டன். அணி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறும் போது சற்று கடினமாகத்தான் இருக்கும். அப்போது தோனி இளம் வீரர்களை ஊக்குவித்து சீனியர் வீரர்களை ஒத்துழைப்பு கொடுத்தும் சரியாக நடந்து கொண்டார்.

Bumrah

மேலும் 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு பின்னர் விராட் கோலியை அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அவரை தோனிதான் காப்பாற்றினார். தோனி தலைமையில் நிறைய மேட்ச் வின்னர்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த பட்டியல் மிகவும் பெரியது இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Advertisement