- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தினேஷ் கார்த்திக்-க்கு இந்த பதவி வழங்கப்பட்டது ஒருவகையில் நல்லது தான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவருக்கு கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்தது என்று பலரும் கூறினர். ஆனால் தினேஷ் கார்த்திக்கோ ஒரு பக்கம் தான் இன்னும் இரண்டு டி20 உலக கோப்பைகளில் விளையாட வேண்டும் என்றும் இந்திய அணிக்காக உலக கோப்பையை வெற்றி பெற்றுத் தருவதே தனது லட்சியம் என்றும் கூறி ஐபிஎல் தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் கிடைத்தது. அதன்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை அற்புதமாக பயன்படுத்திய தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதால் தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார்.

- Advertisement -

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் கட்டாயம் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று பலரும் கூறி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை வெகுவாக புகழ்ந்து பேசியது மட்டுமின்றி உலக கோப்பை தொடரில் அவரது இடம் தற்போதே உறுதியாகிவிட்டது என்று ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் இடம் பெறாததால் இஷான் கிஷன் கீப்பிங் செய்வார் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் இந்திய அணி வேறு ஒன்றை நினைத்து உள்ளது. தினேஷ் கார்த்திக்கை விக்கெட் கீப்பராக நியமித்தது ஒரு வகையில் நல்லதுதான். ஏனெனில் தினேஷ் கார்த்திக்கை ஒரு பினிஷர் என்று பார்க்காமல், இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் தற்போது இந்திய அணி பார்த்து வருகிறது. இதன் காரணமாகவே இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இருந்தும் தினேஷ் கார்த்திக்-க்கு முதன்மை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் உலக கோப்பை தொடரின் இந்திய அணியிலும் அவர் பினிஷாராக மட்டுமின்றி இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் எனவே தற்போதே அவர் உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் தற்போது அவரது ஆட்டத்தில் நல்ல முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். நம்பமுடியாத பல இன்னிங்ஸ்களை அவர் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் என்னை பொறுத்தவரை கட்டாயம் டி20 உலக கோப்பை தொடரிலும் அசத்துவார் என்று ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இளம் வீரரான தீபக் ஹூடா குறித்து அவர் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : அந்த பையனுக்கு அவ்ளோ மெச்சூரிட்டி கிடையாது. கேப்டனாக கோலியையே போடுங்க – பாக் வீரர் ஓபன்டாக்

தீபக் ஹூடாவிற்கு திடீரெனெ இந்திய அணியின் துவக்க வீரராக ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அதனை சரியாக பயன்படுத்தி நல்ல ரன் குவிப்பை அளித்துள்ளார். அவருடைய பேட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருப்பதும், அவருடைய ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருப்பதும் அவர் விளையாடுவதை தொடர்ந்து பார்த்து மகிழ வைக்கிறது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by