அந்த பையனுக்கு அவ்ளோ மெச்சூரிட்டி கிடையாது. கேப்டனாக கோலியையே போடுங்க – பாக் வீரர் ஓபன்டாக்

Pant-1
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. ஆனால் முதல் நான்கு போட்டிகள் மட்டுமே நடைபெற்று முடிந்த வேளையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்குள் ஏற்பட்ட கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட அந்த எஞ்சிய ஒரு போட்டியானது ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை பர்மிங்காமில் நடைபெற உள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்ட வேளையில் அங்கு நடைபெற்ற பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டிக்காக புதிய கேப்டன் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் வரிசைகட்டி நிற்கின்றனர். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை தான் நியமிக்கவேண்டும் என்றும் ரிஷப் பண்ட்டை நியமிக்கக்கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

Pant

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் இன்னும் கேப்டனாக இருந்து ஒரு அணியை வழிநடத்தும் அளவிற்கு முதிர்ச்சி அடையவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியை வழிநடத்த அற்புதமான வாய்ப்பு கிடைத்தும் அந்த தொடரில் அவர் பெரிதளவு சொதப்பி விட்டார். அதோடு கேப்டன்சி பொறுப்பு வந்தவுடன் அவரது பேட்டிங்கும் படுமோசமாக மாறியது.

- Advertisement -

எனவே அவர் கேப்டனாக இனி செயல்படக்கூடாது என்று நினைக்கிறேன். என்னை பொருத்தவரை ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத பட்சத்தில் விராட் கோலியை கேப்டனாக நியமிப்பது தான் இந்திய அணிக்கு நல்லது. சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய அனுபவம் வாய்ந்த சிறந்த தலைமைப் பண்பு உடைய விராட் கோலியை கேப்டனாக நியமித்தால் அது இந்திய அணிக்கு நல்லது.

இதையும் படிங்க : அந்த ஒரு ஓவரை மட்டும் வச்சி அவரை எடை போடாதீங்க. அவரு நல்லா வருவாரு – டேனிஷ் கனேரியா ஆதரவு

ஒருவேளை விராட் கோலி அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தற்போது இங்கிலாந்தில் தங்கி பயிற்சி பெற்று வந்த புஜாராவை அணியை வழிநடத்த சொல்லலாம். அதை விடுத்து இளம் வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை வழி நடத்தும் வாய்ப்பை கொடுப்பது ஆபத்தான ஒன்று என டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement