2022 மெகா ஏலத்தின் போது தோனி இந்த கேள்வியை நிச்சயம் சி.எஸ்.கே நிர்வாகத்திடம் கேட்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் இரண்டாம் வாரம் துவங்க இருப்பதாக ஒரு அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியினால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

IPL

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை முடித்த பிறகு அடுத்த 2022 ஆம் ஆண்டிற்கான மெகா ஏலத்தை பிசிசிஐ இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் மேலும் இரண்டு அணிகளை சேர்த்து மொத்தம் 10 அணிகளுக்கு காண ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 3 வீரர்களை மட்டுமே தக்க வைக்கமுடியும்.

மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் அடிப்படையில் மற்ற அணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் இந்நிலையில் அப்படி மெகா ஏலம் நடக்கும்போது சிஎஸ்கே அணி மகேந்திர சிங் தோனியை முதல்ஆளாக தக்க வைக்க நினைக்கும் அந்த நேரத்தில் தோனி சிஎஸ்கே நிர்வாகத்திடம் கேள்வி எழுப்புவார் என்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

dhoni

தோனியால் இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியாது. அவர் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். அதே போன்று அடுத்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்க உள்ளதால் சிஎஸ்கே அணி தோனியை முதலாக தக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி சிஎஸ்கே அணி தோனியை தக்க வைத்தால் நிச்சயம் அவர் நிர்வாகத்திடம் ஏன் தன்னை தக்க வைக்க முடிவு எடுத்தீர்கள் ? என்று கேள்வி கேட்பார்.

Dhoni

அதுமட்டுமின்றி தன்னை தக்க வைத்தால் அதிக தொகை வீணாவது குறித்தும் அவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் நிச்சயம் பேச வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா கூறியதும் ஒரு விதத்தில் சரிதான். ஏனெனில் ஏற்கனவே மகேந்திர சிங் தோனி அளித்துள்ள ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணி தன்னை தக்க வைக்க வேண்டாம் என்றும் தன்னை ஏலத்தில் விட்டு குறைந்த தொகையில் எடுக்கலாம் என்றும் வெளிப்படையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement