பெங்களூரு அணி இவரை ஈஸியா விட்டுட்டாங்க. கண்டிப்பா இந்த ஸ்பின்னர் அதிக விலைக்கு ஏலம் போவார்

RCB
- Advertisement -

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது ஐபிஎல் தொடருக்கு முன்னர் பிப்ரவரி மாதம் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்லும் வெல்லும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு இதுவரை ஏமாற்றத்தை அளித்துவரும் பெங்களூர் அணியானது தங்கள் அணியில் மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது.

rcb

- Advertisement -

அதன்படி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியிருந்தாலும் அவரை முதல் நபராக 15 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி தக்கவைத்தது. அவரைத் தொடர்ந்து கிளன் மேக்ஸ்வெல் 11 கோடி ரூபாய்க்கும், முகமது சிராஜ் 7 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரை தவிர வேற எந்த வீரரையும் ஆர்.சி.பி அணி தக்க வைக்கவில்லை.

4-வது இடத்திற்கு ஒரு வீரரை தக்க வைக்க வாய்ப்பு இருந்தும் அவர்கள் யாரையும் தக்கவைக்காதது ஆச்சரியத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூர் அணிக்காக முக்கிய வீரராக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் சாஹலை தக்க வைக்காதது உண்மையிலேயே அவருக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும். ஏனெனில் தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் விக்கெட் எடுக்கும் திறமை வாய்ந்த விக்கெட் டேக்கராக அவர் திகழ்ந்துள்ளார்.

Chahal 1

இந்நிலையில் பெங்களூரு அணியில் சாஹலின் இடம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : ஆர்சிபி அணி நிச்சயமாக சாஹலை தக்க வைத்திருக்கலாம். ஏனெனில் அவர் எப்போதுமே போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் விளையாடக் கூடியவர். அதுமட்டுமின்றி பெங்களூர் அணிக்காக நேர்மையாகவும், முழுமனதுடன் அவர் தனது 100 சதவீத உழைப்பையும் வழங்கி விளையாடியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : 207 பந்துகள் களத்தில் நின்று இப்படியா அவுட் ஆவீங்க? கவனக்குறையினால் அட்டமிழந்த – ஜாஸ் பட்லர்

என்னை கேட்டால் பெங்களூரு அணி அவரை நிச்சயம் தக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் பெங்களூரு அணி தவறு செய்துவிட்டார்கள். அவர் மெகா ஏலத்திற்கு செல்லும் பட்சத்தில் நிச்சயம் அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் அதிக விலையில் போட்டி போடும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement