207 பந்துகள் களத்தில் நின்று இப்படியா அவுட் ஆவீங்க? கவனக்குறையினால் அட்டமிழந்த – ஜாஸ் பட்லர்

Buttler
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதன்பிறகு கடந்த 16ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 473 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரன்கள் கூட எடுக்க முடியாமல் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துது. இதன் காரணமாக 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் ஒருமுறை படு மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சின் போது இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தும் வெளியேற ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய ஜாஸ் பட்லர் 207 பந்துகளை சந்தித்து வெறும் இரண்டே பவுண்டரிகளை மட்டும் அடித்து 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரரான இவர் இப்படி 207 பந்துகள் களத்தில் நின்று மிக நிதானமாக விளையாடி இறுதியில் அவர் தனது கவனக்குறைவினால் மோசமான முறையில் ஆட்டமிழந்து வெளியேறியது வீடியோவாக தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2022 : அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் எங்கே? எப்போது நடைபெறும்? – வெளியான தகவல்

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்ஸன் வீசிய பந்தை தட்டி விட்டு ஓட முயற்சித்த பட்லர் அந்த பந்திற்கு ரன் ஓட முடியாது என்பதால் மீண்டும் கிரீசுக்கு திரும்பினார். ஆனால் அதற்கு முன்னரே அவர் பந்தை அடிக்கும் போது தவறுதலாக பின்காலால் ஸ்டம்பை இடித்து விட்டார். இதன் காரணமாக அவர் ஹிட் விக்கெட் முறையில் வெளியேறிய போது சோகமாக பெவிலியன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement