350 ரன்களுக்கு மேல் இந்திய அணி சேசிங் செய்யனும்னா இவர் நிச்சயம் வேணும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எளிதாக வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் குவித்தது.

indvsaus

- Advertisement -

சிட்னி நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 374 ரன்களை குவிக்க இந்திய அணி அதனை சேஸிங் செய்த இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 389 ரன்களை குவிக்க மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் அடித்தாலும் வெற்றிகரமாக அந்த பெரிய இலக்கினை சேசிங் செய்யமுடியவில்லை.

இந்திய அணியின் இந்த நிலைமை குறித்து தற்போது பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குறிப்பிடுகையில் : இது போன்ற பெரிய இலக்கினை சேசிங் செய்யும்போது அதிரடியான துவக்கம் நிச்சயம் அவசியம். அந்த வகையில் ரோகித் சர்மா இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு தான். ரோகித் போன்ற வீரர்கள் இருக்கையில் 350க்கும் மேல் இருக்கும் இலக்குகளை துரத்த முடியும். இந்த தொடரில் என்னை பொறுத்தவரை தவானுடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி இருக்கலாம்.

துவக்கவீரராக ராகுல் சிறப்பாக விளையாட முடியும் என்பதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். இருப்பினும் அவர் ஐந்தாவது இடத்திற்கும் தகுதியானவரே. எந்த இடத்தில் இருந்தாலும் அவரால் ரன்களை குவிக்க முடியும். தற்போதுள்ள இந்திய அணியின் டாப் ஆர்டர் பட்டியலில் ரோகித் சர்மா போன்றவர்கள் இருப்பது நிச்சயம் இது போன்ற பெரிய சேசிங்ற்கு அவசியம் என்று கூறினார். ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெறாத ரோகித் டெஸ்ட் தொடரில் மட்டும் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் தற்போது அணிக்கு திரும்புவது சந்தேகமாக உள்ளது.

Rohith-2

மேலும் இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் ராகுல் தற்போது 5வது இடத்தில் இறங்கினாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன்களை மட்டுமே குறித்து அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது 66 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். இருப்பினும் அவரால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement