- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திலக் வர்மா விலகினால்.. தகுதியான அவரை 2026 டி20 உ.கோ அணியில் செலக்ட் பண்ணுங்க.. ஆகாஷ் சோப்ரா

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அத்தொடரில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் திலக் வர்மா விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

2025/26 விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய அவர் திடீரென உடல் உபாதைக்கு உள்ளானார். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றில் சிறிய வகையிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் திலக் வர்மா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

திலக் வர்மாவுக்கு பதில்:

ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 3 பேட்ஸ்மேனாக திகழும் அவர் கடந்த ஆசியக் கோப்பை ஃபைனலில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அபாரமாக விளையாடி பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற வைத்தார். எனவே ஒருவேளை திலக் வர்மா விலகினால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திலக் வர்மா விலகினால் அதற்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தாமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். விஜய் ஹசாரே கோப்பையில் நன்றாக விளையாடும் அவரை 2025 ஆசியக் கோப்பையில் கழற்றி விடப்பட்து அநியாயமாக தெரிந்தது. ஆனால் தற்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் வாய்ப்பு இருக்கிறது”

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு:

“மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள ஸ்ரேயாஸ் 2025 ஐபிஎல் தொடரில் நெருப்பாக விளையாடினார். எனவே இந்திய அணியில் ஸ்ரேயாஸ் விளையாட என்னுடைய ஓட்டைத் தருகிறேன். இதற்கு முன் டி20 அணியில் இருந்த ரியன் பராக்கும் அந்த இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட தகுதியானவர்களில் ஒருவர். குறிப்பாக இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஆல் ரவுண்டர் வீரரை தேர்ந்தெடுக்க விரும்பினால் ரியன் பராக் சரியாக இருப்பார்”

இதையும் படிங்க: இந்திய அணியை வீழ்த்தி டி20 உலககோப்பையை கைப்பற்றப்போகும் அணி இதுதான் – கிரீம் ஸ்மித் கருத்து

“ஆனால் எனது முதல் ஓட்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்குவேன். பின்னர் ரியன் பராக், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு வழங்குவேன். அதே சமயம் இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் தேவையில்லை. எனவே ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க தேவையில்லை. விக்கெட் கீப்பருக்கான தேவையும் இல்லை என்பதால் நான் ஸ்ரேயாஸை பரிந்துரைப்பேன்” என்று கூறினார்.

- Advertisement -