ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் 11ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை சிறப்பாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு சுருட்டி 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா 207 ரன்கள் எடுத்து 282 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்தும் தென்னாப்பிரிக்கா முதல் வெற்றிக்காக போராடி வருகிறது. முன்னதாக இந்தப் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் 2 நாட்களில் மொத்தம் 28 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருந்தது.
மௌனமான ஆஸி, இங்கிலாந்து:
இந்நிலையில் இதுவே இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் 2 நாட்களில் 28 விக்கெட்டுகள் விழுந்திருந்தால் இந்திய அணி குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக பிட்ச்சை சுழலுக்கு சாதகமாக மாற்றியுள்ளது என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் விமர்சித்திருப்பார்கள் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச் பற்றி அவர்கள் யாரும் விமர்சிக்காமல் மௌனம் காப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக 2021, 2023 தொடர்களில் மைக்கேல் வாகன், இயன் ஹீலி போன்ற முன்னாள் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவை வெளிப்படையாக விமர்சித்தனர். அந்த வகையில் இந்தியா மட்டும் இளிச்சவாயா? என்று கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. அதாவது இந்தியாவில் நடைபெறும் போட்டியில் முதல் 2 நாட்களில் 28 விக்கெட்டுகள் விழுந்திருந்தால் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் வித விதமாக பேசியிருப்பார்கள்”
இந்தியா இளிச்சவாயா:
“இந்தியாவில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தால் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். அதை இந்தியா வேண்டுமென்றே செய்து டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்கச் செய்வதாக அவர்கள் விமர்சித்திருப்பார்கள். அது போன்ற தலைப்புச் செய்திகளை ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் உங்களால் பார்க்க முடியும்”
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள் – காரணம் என்ன?
“ஆனால் அது இங்கிலாந்தில் நடைபெறும் போது விளையாட்டுக்கு உகந்த பிட்ச் என்று பாராட்டப்படுகிறது. இத்தனைக்கும் அங்கே பந்து பெரியளவில் நகராததால் பேட்ஸ்மேன்களின் தடுப்பாட்டம் கெட்டுப் போனதாக அமைகிறது. ஒருவேளை இங்கிலாந்தில் பேட்ஸ்மேன்களின் தடுப்பாட்டம் கெட்டுப் போகுமானால் அது இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கும் பொருந்தும்” என்று கூறினார்



