அவர சரியாவே யூஸ் பண்ணல, 10 பிளேயரோட ஆடுனா எப்டி ஜெயிக்க முடியும்? பாண்டியா கேப்டன்ஷிப் தவறை விளாசும் ஆகாஷ் சோப்ரா

Aakash-Chopra
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா கடைசியாக நடைபெற்ற டி20 தொடரில் 3 – 2 (5) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இத்தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்தது. அதனால் கடைசிப் போட்டியிலும் வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று தலை குனிந்தது.

அதன் காரணமாக பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016க்குப்பின் முதல் முறையாக ஒரு தொடரில் தோற்ற இந்தியா தங்களுடைய வரலாற்றில் முதல் முறையாக ஒரு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் தோல்வியை சந்தித்தது. மேலும் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் வருங்கால கேப்டனாக கருதப்படும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் கேப்டனாகவும் ஆல் ரவுண்டராகவும் சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

10 பிளேயர்ஸ் மட்டும்:
இந்நிலையில் 2வது போட்டியிலேயே சஹாலை சரியாக பயன்படுத்தாமல் கையில் வைத்திருந்த வெற்றியை காலி செய்த ஹர்திக் பாண்டியா தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் அக்சர் படேலை இத்தொடர் முழுவதுமே சரியாக பயன்படுத்தவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் இந்த தொடர் முழுவதும் வெறும் 10 வீரர்களுடன் மட்டுமே இந்தியா விளையாடி வெற்றிக்கு போராடியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“கடைசி போட்டியில் நீங்கள் பந்து வீச வந்த போது முற்றிலும் மாறுபட்ட கதை அரங்கேறியது. அதாவது அக்சர் படேல் கடந்த போட்டியில் முதல் ஓவரையே வீசி முழுமையாக 4 ஓவர்களை வீசினார். ஆனால் இந்த போட்டியில் மொத்தமாக அவர் வெறும் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இந்த வகையில் இத்தொடர் முழுவதும் அவரை பயன்படுத்திய விதம் எதை அடிப்படையாகக் கொண்டது என்பது நமக்கு தெரியவில்லை. இதற்கு நீங்கள் நிக்கோலஸ் பூரான் களத்திற்கு வந்தால் குல்தீப் யாதவ் பந்து வீச வேண்டுமா அல்லது அக்சர் பட்டேல் 4 ஓவர்களை வீச வேண்டுமா என்று கேட்பீர்கள்”

- Advertisement -

“ஆனால் ஒருவேளை நிக்கோலஸ் பூரான் பேட்டிங் வரிசையில் மேலே வந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும். அதே போல தான் இந்த போட்டியில் அர்ஷிதீப் சிங்கிடம் கெய்ல் மேயர்ஸ் அவுட்டானதும் பூரான் பேட்டிங் செய்ய வந்தார். இருப்பினும் அக்சர் படேலை நாம் பயன்படுத்தவில்லை. அதனால் இந்த போட்டியில் நாம் 10 வீரர்களுடன் மட்டுமே விளையாடியதை போன்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் புதிய பந்தில் ஹர்திக் பாண்டியா வீசும் எந்த பயனும் ஏற்படாமல் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கினார்”

“அதே போல உங்களுடைய முதன்மை பவுலரான முகேஷ் குமார் இந்த தொடர் முழுவதும் ஒரு முறை கூட புதிய பந்தில் வீசவில்லை. ஆனால் ஒருநாள் தொடரில் அவர் புதிய பந்தில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் அவரை நீங்கள் இந்த டி20 தொடரில் பழைய பந்து பவுலராக பயன்படுத்தினீர்கள். அதே போல புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசி ஒரு விக்கெட்டை எடுத்த அர்ஷிதீப்புக்கு 2 ஓவருக்கு மேல் வழங்கவில்லை”

இதையும் படிங்க:ஐபிஎல் 2024ல் சிஎஸ்கே -விற்கு காத்திருக்கும் ஏமாற்றம்… முக்கிய வீரர் அணியில் இருந்து விலக வாய்ப்பு.. அப்போ ஒரு ஆல்ரவுண்டர் அவுட்டா

“மொத்தத்தில் இது போன்ற பவுலிங் மாற்றங்கள் என்னால் விளக்க முடியாத அளவுக்கு எந்த ஐடியா அடிப்படையிலும் நிகழ்த்தப்படவில்லை” என்று கூறினார். அப்படி தாறுமாறாக கேப்டன்ஷிப் செய்த ஹர்திக் பாண்டியா 3வது போட்டியில் திலக் வர்மாவை ஃபினிஷிங் செய்யவிடாமல் சுயநலமாக நடந்து கொண்டதும் நிக்கோலஸ் பூரானுடன் வம்பிழுத்து அடி வாங்கியதும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement