- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி, கோலி மாதிரி அந்த திறமையை கொண்ட கில்.. ரோஹித் போல சூப்பர்ஸ்டாரா வருவாரு.. ஆகாஷ் சோப்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் வருவார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ஐசிசி 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலத்திலேயே காயத்தால் தொடர்ச்சியாக விளையாட முடியாத அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஓரளவு அசத்தி வந்த அவர் 2023 சீசனில் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதே வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் டி20 கிரிக்கெட்டில் சதமும் அடித்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்தார். அதனால் ஒரே காலண்டர் வருடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய துவக்க வீரராக சுப்மன் கில் சாதனை படைத்தார்.

- Advertisement -

தோனி – விராட் கோலி மாதிரி:

அப்படி 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு அர்த்தத்துவதால் அவரை ஆல் ஃபார்மட் பிளேயரை கருதும் பிசிசிஐ துணை கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் எம்எஸ் தோனி, விராட் கோலி போல போட்டியின் துடிப்பை புரிந்து விளையாடும் திறமை சுப்மன் கில்லிடம் இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“சுப்மன் கில் போட்டியின் துடிப்பை நன்றாக புரிந்து கொள்கிறார். அவர் போட்டி எங்கே செல்கிறது என்பதை 100% புரிந்து கொள்கிறார். அதனால் எங்கே நாம் செல்ல வேண்டும்? எதை எடுத்துக் கொள்ள வேண்டும்? தமக்கு தகுந்தார் போல் எப்படி போட்டி நகரும் என்பதை அவர் உணர்ந்து செயல்படுகிறார். சுப்மன் கில் வருங்கால சூப்பர்ஸ்டாராக வரும் விஷயத்தை கொண்டுள்ளார்”

- Advertisement -

சூப்பர்ஸ்டார் சுப்மன் கில்:

“அவரை நீங்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் எடுக்காதது பரவாயில்லை. தற்போது இளமையாக இருக்கும் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். ஐபிஎல் தொடரில் ஒருமுறை அவர் 900 ரன்கள் அடித்துள்ளார். எனவே இளமையாக இருக்கும் அவரால் டி20யில் முன்னேறுவதற்கான வழியை கண்டறிய முடியும். ரோஹித் சர்மா 2011 உலகக் கோப்பையில் விளையாடவில்லை”

இதையும் படிங்க: சச்சினை அப்படி பாத்ததில்லை.. இது தெரிஞ்சுருந்தா டிராவிட் டிக்ளேர் செஞ்சுருக்க மாட்டேன்ன்னு சொன்னாரு.. ஆகாஷ் சோப்ரா

“ஆனால் அவர் தற்போது இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். அந்த வகையில் தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் வருங்காலத்தில் சுப்மன் கில் முன்னேறுவார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அத்துடன் ரோஹித் சர்மா போல கில் வருங்கால கேப்டனாகவும் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -