
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான சுப்மன் கில் கடந்த 2025 ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளுக்குமான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதோடு சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் துவக்க வீரராக விளையாடி வந்த வேளையில் அவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் டி20 போட்டிகளில் துவக்க வீரராக விளையாட வைக்கப்பட்டார். இதற்கு காரணம் யாதெனில் : ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கும் அவரை மூன்று வகையான போட்டிகளுக்குமான கேப்டனாக மாற்றும் முயற்சியில் இறங்கிய நிர்வாகம் டி20 போட்டிகளிலும் அவரை துவக்க வீரராக மாற்றியது மட்டுமின்றி துணை கேப்டன் பதவியையும் வழங்கியது.
ஆனால் தனக்கு கிடைத்த அந்த 15 வாய்ப்பில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஏமாற்றம் அளித்த சுப்மன் கில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அதிரடியாக அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் 317, 321 ரன்களை குவிக்கவே இனி சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக சுப்மன் கில் இருந்தாலும் இனிமேல் தனது வாழ்க்கையில் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் மாறுவதற்கான வாய்ப்பே இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
தற்போதைய இந்திய டி20 அணி விளையாடும் வகையை பார்க்கும் போது சுப்மன் கில் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக மாற வாய்ப்பு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் கடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி 250 ரன்களை நோக்கி டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இப்படி ஒரு அணி அதிரடியாக ஆடும்போது சுப்மன் கில் போன்று நங்கூரம் அமைத்து விளையாடும் வீரருக்கு வாய்ப்பில்லை என்பதே என்னுடைய கருத்து.
இதையும் படிங்க : பிரஷர் இருந்தா எனக்கு ரொம்ப புடிக்கும்.. இதுக்காக தான் கிரிக்கெட் விளையாடுறேன் – பும்ரா ஓபன்டாக்
ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை சுப்மன் கில் அட்டகாசமான வீரர். அதேபோன்று அவர் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடி வருகிறார். தற்போதுள்ள இந்திய டி20 அணிக்கு தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றி வேறு விதமாக விளையாடும் பிளான் அவரிடம் இருக்காது என்று தனக்கு தோன்றுவதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.