- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு கோச்சா மட்டும் தோனி எப்பவும் வரவே மாட்டாரு.. காரணத்தை கூறிய – ஆகாஷ் சோப்ரா

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே முன்னாள் வீரரான டிராவிட் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு அவர் பதவி விலகினார். அதற்கடுத்து புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற கம்பீரின் தலைமையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி வரமாட்டார் : ஆகாஷ் சோப்ரா

இப்படி அடுத்தடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் வேளையில் எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் தோனி வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது தோனி தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார்.

- Advertisement -

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அப்படி ஒருவேளை அவர் பெற்றால் சிஎஸ்கே அணியின் மென்டராக பணியை மேற்கொள்வார் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தோனி வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசி அவர் கூறுகையில் : ஏற்கனவே தோனி இந்திய கிரிக்கெட்டில் நிறைய காலத்தை செலவு செய்துவிட்டார். எனவே இனிவரும் நாட்களில் அவரது குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்.

- Advertisement -

ஒருவேளை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அவர் வந்தால் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து மாதங்களாவது அணி வீரர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். அதனை அவரால் நிச்சயம் செய்ய முடியாது. பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் பயிற்சியாளராக ஐபிஎல் போட்டிகளில் ஒப்புக் கொள்வதற்கு காரணமே அந்த ஆண்டு முழுவதும் அவர்களுக்கு இரண்டு மாதங்கள் தான் வேலை.

இதையும் படிங்க : சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் தான். அதேவேளையில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? – பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்

அதனால் தான் ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்துவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருக்க மறுக்கின்றனர். அதை பல் தான் தோனியும் இந்திய அணியின் பயிற்சியாளராக ஒப்புக்கொள்ள மாட்டார் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -